ஜல்லிக்கட்டு கட்டு கட்டு தமிழா நீ எழுந்து மல்லுக்கட்டு
உன் வீரம் என்னாகும் சொல்லிக் கட்டி போடு மெட்டு
டெல்லி தடுத்தாலென்ன பீட்டா குலைத்தாலென்ன
குதர்க்கம் கொள்ளவந்த நச்சு நாகங்களை
ஓரம் கட்டு ஓங்கி வாளால் வெட்டு
பண்டைத் தமிழன் வென்று தந்த முதுசமடா
இன்றும் காளையோடு காளை மோதும் வீரமடா
வீழ்வானோ தமிழன் வீரம் அறுந்து
சோரம் போகாதே தம்பி
அன்னை தந்த பால் ஆண்மை குறைந்திட
தன்மானக் குனிவேதடா
காளையோடு காளை மோதி
களம் கண்டு வந்த வீரமடா
வீரம் செரிந்த மேனி தனில் குருதி குளித்து
உவகை கொண்டது உள்ளமடா
காளையும்
எங்கள் தோழன்தானே
களம் மோதும்
நல்ல நண்பன்தானே
பாசமும்
நேசமும் ஊட்டி ஊட்டி
வீட்டினில்தானே
வீரம் வளர்த்தோம்
வாடா பதரே
வாடா
பேரிடி
முழக்கம் முழங்கி
பகையே உன்னை
அறுப்போம்
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...