சாதனை பெண்ணே போய் வா, வீரப் பெண்ணே நீ போய் வா
இருள் சூழ் உலகில் ஒளி விளக்கேற்றி தாய்க்குலம் காத்த தாயே நீ போய் வா
பொல்லா உலகெனக் கண்டும் போகட்டும் எனக்கென்ன என அஞ்சிக் கிடந்தவள் நீ
அல்ல
அரசியலென்ன அரசியல் அரசியாய் நாடாண்டு ஆளுமையும் தந்தாய் தாயே நீ போய்
வா
இடியென பொழிந்து மாதர் சிந்தும் கண்ணீர் மழைத் தூறல் உனக்காய்
வீழ்கிறது மண்ணில்
இரும்புப் பெண்ணே அம்மா நீ போய் வா உன் ஆத்மா சாந்தியுறுக, சாந்தி
சாந்தி சாந்தி
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...