காலக்
கண்ணோட்டம் கண் மலர்ந்து
வேண்டுமா வேண்டாமா என்றது வாழ்வு
கை நிறைய பணம் இருந்தும்
பை நிறைய வேண்டுமே பந்தத்திற்கு
என் செய்வேன்
பூக்கள் வீழும் முன்னே பூக்களை தாங்கும்
காம்பே வீழ்ந்தது இங்கே
ஒன்றுக் கொன்று முறணான நீரோட்டம்
ஒன்று ருந்தால் மற்றொன்று காணாத்தூரம்
வாழ்வெனும் நதியில் மிதக்கின்றேன்
காலக்கரை ஏறுவேனா
காணவில்லை கரையை
ஓடம் என்று ஏறிவிட்டேன்
காகித ஓடத்தில் நிலை இல்லாப் பயணம்
நீரடியில் மௌனம் யாரும் அற்ற சலனம்
மூழ்கும் போதில் நிலாவின் முகம் பார்த்தேன்
என் ஆத்மாவின் துடிப்பை
நிலைக் கண்ணாடியாய்
அது காட்டிக்கொண்டிருந்தது
அன்பொன்றே அள்ளக்குறையாத ஒன்று
இனி என்ன அள்ளிக்கொள் என
ஆத்ம ஜீவனையும்
சமர்ப்பணம் தந்துவிட்டேன்
அன்பிருந்தால் அதை நீயும் கொடுத்துச் செல்
ஆத்ம பலன் கைகூடும்
ஆயிரம் வாசல் கொண்டது இதயம்
ஓட்டை வீட்டில் முள்ளும் மலரும்
பாத காணிக்கை கேக்கிறது
இதயம் பாவம் என்ன செய்யும்
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...