samedi 9 avril 2016

இதயம் எதற்கு இரும்பறையில் !!!




இன்று சிரியுங்கள் நாளைய பொழுதில்
நாலும் நடக்கலாம் !
நாளை உதிர்வேன் என அறிந்தும்
மலர்கள் சிரிக்கலையா 
உதிரும் இறக்கை என தெரிந்தும்
பட்டாம் பூச்சி பறக்கலையா 
இன்ப துன்பங்கள் நிரந்திரம் அல்லவே
இடிந்தது மனசென நினைந்து
இரும்பறையில் இதயத்தை பூட்டிவிடாதீர்கள் !!
அதோ பஞ்சவர்ணக் கிளிகள் அழைக்கிறன
இமைச் சிறகை விரித்து இருள் அகற்றி
உதயம் காணுங்கள் !!!

Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...