பெண்,ணென்பார் மண்,ணென்பார் நிலா
என்பார் - நிழல் 
அற்ற நீரோட்டக் கூற்று போகட்டும் விட்டு
விடு   
கருவறை இன்றி நின் கள முனை அன்றி 
ஆணும் இங்கேது !     
தாய்ப்பாலுண்ட நிலை
மறந்தே மாசுற்றோர்
தாழ்த்தி நிந்தனை தூத்தி துயரச்
சிறையிட்டாலும் 
போகட்டும் இறைவனுக்கே என 
மன்னிக்கும் மகோனதமே
பூவும் பொட்டும் மஞ்சள் தாலியும் உன்
கூலியல்ல 
வானமே எல்லை
வாங்கித்தாறேன் விண் வைரங்களை
தொடு வானம் இன்னும்
கொஞ்சத் தூரம்தான் உனக்கும்
பாவலர் வல்வை
சுயேன்