உன்னிரு விழி
இரண்டும் பொய்
யல்ல தேனே
கண்ணாம்
பூச்சி களிப்பில் என்னை
காட்டுதடிஉன் வாஞ்சை கண்ட விண் மீன்களும்
உன் னழகு ஒளியில் வெக்கிப் போச்சுதடி
இரவுக்கு அது வேண்டும் பகலுக்கும் நீ வேண்டும்
காந்த மலரே முடாதே விழியை
உனக்குள் பிடித்த என்னை திருப்பித் தந்துவிடு
சிகரம் ஏறும் சித்தெறும்பு நான்
இன்னும் , அதன் அடிவாரத்தில் !
விழியால் நீயும் எழுது கவிதை
விடிந்தாலும் அழியாது
உன் ஓரப் பார்வை அறிவேன்
அதன் வாசகம் வரைவேன்
நானும் நீயும்தானே இங்கு
அந்த அலைகளிடம் மெட்டெடுத்து
மீட்டுவோம் அனுராகச் சுரத்தில்
அந்தி நேரத் தென்றல் பாட்டு..
Kavignar Valvai Suyen
ஆகா...! ரசித்தேன்...
RépondreSupprimerநன்றி் என் நட்பே...
Supprimer