பருவக் கோலம் பற்றி எரிகிறேன்
வாலிப முறுக் கென்னை கெஞ்சுதடி கொஞ்சுதடி
கொஞ்சமேனும் கொஞ்சலாமே
விஞ்சேன் அஞ்சாதே
தணித்திடு ஏஞ்சலே என் தாகம் நீதானே..
நித்தம் தருவேன் மொத்தம் அறியேன்
ஆசை கொண்ட பித்தன்
அவனியில் எவனில்லை
மன்மத பாணம் தைத்திட வீழ்ந்தேன்
முத்தக் கணக்கை வையாதே
கொடுக்கவா எடுக்கவா
இருட்டறை கூடு இன்ப சுரம் மீட்டுதடி
பூட்டிய கதவுக்குள் நீயும் நானும்தான்
சம்சாரம் இல்லா சன்னியாசியும்
விதி விலக்கல்லடி ...
Kavignar Valvai Suyen
முத்தக் கணக்கை வையாதே
RépondreSupprimerகொடுக்கவா எடுக்கவா ...AAha!....
சகோதரி வேதாக்கா... இது சொத்துக் குவிப்பல்ல அன்றாட வரவு செலவில் முத்தக் கணக்கும் ஒன்றே (வையாதே) ஏசிவிடாதே கொடுத்து வாங்குவதில் கடனாளி யாரும் இல்லை என்கிறான் அவளின் நாயகன் - மகிழ்ச்சி
Supprimerமகிழ்ச்சி ஐயா... வாழ்த்துகள்...
RépondreSupprimerதிண்டுக்கல் தனபாலன், நட்பே நீ தந்தாய் நான்கெழுத்து நான் தந்தேன் மூன்றெழுத்து நன்றி....
Supprimerவணக்கம்
RépondreSupprimerஐயா.
ஒவ்வொரு வரிகளையும் இரசித்து மகிழ்ந்தேன் ஐயா... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தம்பி ரூபனுக்கு என் மன மகிழ்ச்சி தந்தேன் ரசனை மிக்கவன் படைப்பாளியே உன் படைப்புகளை நானும் அறிந்து மகிழ்ந்தேன் - நன்றி
Supprimer