கவி தெரியா புலைஞன்
என்னை
கவி எழுத வைத்தவளே ..தொட்டது பாதி தொடாதது பாதியுமாய்
எழுதிக் கிழித்தேன் பல நூறு கவிதை
புரியவில்லை என்றாய் ..
என்னை நீ படித்து உன்னை நான் படித்து
வரவிலக்கணத்தோடு ,
மழலைக் கவி வடித்தோம்
வாழ்த்துக்கள் வந்து குவிந்தன ..
என்னை கவிஞனாக்கியவளே
என்னும் சொல்லிக் கொடு நீ
எழுதாத பக்கங்களில் எழுதுகிறேன்
புதுப் புது புதுக்கவிதை ..
எண் இல்லா இரவு பகல் இன்னும்
நமக்காக காத்திருக்கின்றன ..
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...