mercredi 17 août 2016

தொட்டும் தொடாத காதல்!!!



தொட்டும் தொடாத காதல் கதிர் பட்டுக் கலைந்த தென்ன மாயம்
ஏக விரதன் நானே அழகே அலையாய் தழுவித் தணிப்போம் தாகம்
தோகைக் கூந்தலாடும் மயிலே கோதும் விரல்கள் உன்னில் கோபம்
பரிசம் போட்டு வந்தும் தரிசன விரசம் தொடாத பந்தம்

வெட்ட வெளி வானத்திலே அந்த நிலா நீ வெக்கம் விட்டு
பக்கம் வந்து அணைக்கிறாயே இன்ப உலா        
தொட்டணைக்கத் துடிக்கும் நீ என் தோழன்தான்
தாலி கட்டும் முன்னே காண வேண்டாம் சந்தோச காணம்தான்

கூட்டாச்சி முறையிலே கூடி வாழ வந்தேன்டி
கூதலுக்கு போத்துக்கணும் கூந்தல் கொஞ்சம் தாயேன்டி                  
தந்தி அடித்துத் தர்க்கம் பண்ணும் முந்திரிப் பருப்பே
ஆம்ஸ்ரோங் மீண்டும் வரமாட்டான் வாறேன் முன்னே
உந்தன் நிலா உனக்குத்தான் உயரே நீயும் பறக்காதே
நாளம் அறுந்த வீணையானால் நடைச்சாலையில் வீழ்வேன் நானே
மஞ்சள் குளித்து மருதாணி பூசும் பெண்ணே அஞ்ச வேண்டாம்
தாவணிக் கனவில் மோகினி வந்தாள் மோசம் செய்யேன் அறிவேன் நானே
மூணு முடிச்சு போட்ட பின்னே மஞ்சம் காண்போம் அன்றே வாறேன்...

பாவலர் வல்வை சுயேன்

ஏடறியேன் எழுத்தறியேன் !!!!




உச்சி மலைச் சாரல் கொஞ்சும் பசும் மேனி   
கோவை இதழ் கொஞ்சும் கருணை
ஒத்தையிலே ஓர் கிளி !
ஒத்தை மரமாய் நான் இருக்கக் கண்டு  
வரி வளை குலுக்கி வா வா என்றாள்
இணை சேர்ந்து கிளை அமர்ந்து கீக்கீ என்றேன்
கிளியல்ல கீதை அல்ல கிளி மொழி பேசும்
மோகினி அவள் !
அர்த்த ராத்திரியென்ன உச்சி வெய்யிலிலும்
உக்கிர தாண்டவம் ஆடி இனிய கானம் பாடுகிறாள்
ஏட றியேன் எழுத்தறியேன் ஏதோ சொன்னேன்
கவி யென்றழைத்தே தேக நரம்பெங்கும் சுரம் மீட்டுகிறாள்
இது போதும் எனக்கு இது போதும் எனக்கு
இரவென்ன பகலென்ன தொடும் வானம் தூரம்தான்
யென்மங்கள் எழே ஏழில் ஏதோ ஒன்றில்
எழுதிவிட்டாள் போலும் தன் சுய சரிதை

பாவலர் வல்வை சுயேன்

jeudi 11 août 2016

நீ வருவாயென !!!



வெள்ளை காகிதத்தில் உன் பெயர் எழுதினேன் ரோஜா
காகிதமும் பேனாவும் முத்தம் கொடுத்துவிட்டு
திரும்பிப் பார்த்தன என்னை
நாணம் உற்று நலிந்தேன் மெல்ல !
இவ்வேளை எங்கிருந்தோ வந்த இரு தேனீக்கள்
பக்கம் பக்கமாய் வெள்ளைக் காகிதங்கள் இருந்தும்
உன் பெயர் மேல் அமர்ந்தே 
ஆசை முத்தம் இடுகின்றன !     
என்னவளே நீ கருப்பஞ் சாற்று இனிப்பே என
சோலை வனமும் ரீங்காரம் பாடுதடி
காகிதமும் பேனாவுமாய் தேனீக்களோடும்
முத்தப் பரிமாற்றம் நித்தம் செய்திட
அந்த மண நாள் வரவுக்காய் காத்திருக்கிறேன்
நீ வருவாயென....

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...