samedi 26 septembre 2015

சீதணம் .....



சின்ன வெளிச் சீமையிலே சீமந்தம் தேடும் சின்னவனே
சீதணச் சந்தையில் என்ன விலை உன் விலை
கருப்பஞ்சாறே விருப்பம் உனக்கு
கரஞ்சி எதற்கு கறுப்பாய் அதற்கு
சுட்டு விரல் நீட்டாதே சுட்டுவிடும் நெருப்பு
தன்மானம் இழந்த மனுசா
மண்ணில் பெண்ணே மின்னும் பொன்னடா
பெட்டகம் திறந்து அள்ளி எடு அள்ளக்குறையா அச்சயம் அவளே
நிந்தனையாலே வாசம் இழந்து பூவே புயலாய் வீசுகிறாள்
பூவின் வாசம் நுகரும் வண்டே உன்னை கொடு தன்னை தருவாள்
வாழ்க்கை பாட ஓடமே சாக்கடை நீரில்  இன்னும் ஏன் நீ
செல்லரித்துப் போகும் வாழ்வே நாளை உனது
சீதணச் சந்தையில் என்ன விலை உன் விலை...
kavignar Valvai Suyen

vendredi 28 août 2015

ஏகாந்த விழிகள்…


குளிர் நிலா என நினைந்திருந்தேன்
நீயும் என்போல் எரி நிலா என
இன்றுதான் உணர்ந்தேன்...
கொன்றுவிடு என்னை
இல்லையேல் வென்றுவிடு
நீ நாணம் கொண்டு மௌனித்தாலும்
உன் ஏகாந்த விழிகள் சொல்லுதடி
என் மேல் நீ கொண்ட காதலை...

Kavignar Valvai Suyen

mercredi 5 août 2015

குடும்பக் கட்டுப் பாடில்லா நில விருது .....

ஒரே சூலில் அளவில்லா ஆச்சரியக் குழந்தைகள்

முகத்தில் முள்ளென்றாலும் அன்னையின் அகத்தில்

அன்பே குடியிருப்பு....

கொட்டித் தருகிறாள் கொடையாய்

சக்கரை இனிப்பில்

தன் இதய இருப்பின் வங்கி வைப்பகத்தை

குடும்பக் கட்டுப் பாடில்லா நில விருது

எங்களின் முற்றத்து பலா....
Kvignar Valvai Suyen

mardi 28 juillet 2015

மனிதருள் மாணிக்கம் அப்துல் கலாமுக்கு ஆத்ம அஞ்சலி....

ஆத்ம விரிச்சிகன் அன்புடை நாயகன் அப்துல் கலாம்

அறிவியல் ஆய்வின் அரசுரிமை நாயகன்

இல்லை என்று இல்லாது இந்தியம் மிகையுற

மரைக்காயர் ஜைனுலாப்தீன் ஆஷியம்மா

ஆளக்கடல் முத்தாய் ,

உன்னை முகிழ்ந் தெடத்து தந்தாளே....

 

இலக்கியத் தாயின் இறையடி எழுத்தே

இளைஞர் கூடலின் இணையடி நட்பே

விரலிசை பாட்டின் வீணையின் தோழனே

பாரத தேசத்தின் கணை உயர் தமிழ் கலாமே

எல்லையில்லா நாயகா பாரதத்தின் பணி முகத் தலைவா

பத்மபூஷன், பாரதரத்னா, ஆர்யபட்டா , பத்மவிபூஷன் என

அப்துல் கலாம் உன்னிடத்தில் அற்பணம் ஆனதினால்

விருதுகள் யாவுமே விரலிசை நயம் ஆடிடக் கண்டேன் .....



ஈரடித் திருக் குறள் நிறை நீள் வளி நடந்தவா

கற்புடை கவியினில் நற் குழந்தைகளும் ஈன்று

நாடே உன் தாய் வீடாய் வாழ்ந்த மாமேதையே

திருவே, நெருப்பின் சிறகுகளி சுயசரிதை எழுதி

விடை கூறிச் சென்றாயோ ......

அறிஞனே விஞ்ஞான உலகுன்னை அழைக்கின்றது

தடை இல்லை தமிழா ஏவுகணை ஏவலே

தாய்த் தேசம் உன்னை தாலாட்டும் வேளையிது

தங்கமே தவப்புதல்வா அப்துல் கலாம் நீ இளைப்பாறு...
Kavignar Valvai Suyen

lundi 27 juillet 2015

தேசியத் தலைவன் வே. பிரபாகரன் .....

சுயநிர்ணயம் இல்லா சுயம்பின் உறங்கா நிலை உள்ளிருக்க
தன்நிலை இல்லா கொலைகளில் உதிரம் கொப்பளித்தோட
சுவரெங்கும் சுண்ணாம்புச் சட்டை
உறங்காத் தவத்தில் நீறாடை கட்டியிருக்கும் நெருப்பிது
கொடுத்த தலைகளுக்கான விடுதலை கீற்றோடு
வீறு நடை கொள்ளும் விலையாவதில்லை
தமிழீழத்தின் தன்மான விடுதலை....

Kavignar Valvai Suyen
 

dimanche 26 juillet 2015

நீ பருவ நிலா...

நிலாவே நீ தூர நிலா உன்னிருவிழியின் கருவண்டுகள் காந்த நிலா

சின்னத் திடல் நெத்தியிலே செண்ணிறத்து குட்டி நிலா

புன்னகையில் பூச்சூடுகிறாய் நீ பருவ நிலா

நிலாவே உன் காதோர லோலாக்கில்

சிலிமிசம் செய்யும் சிட்டு நான்

உன்னை தொட்டுணர்ந்தேன் நீ பட்டு நிலா

அமாவாசை இருள் அறியேனடி இனி நான்

உலா போகிறேன்

எனி என் வாழ்வில் என்றும் நீயே பறுவ நிலா ...


Kavignar Valvai Suyen

mardi 21 juillet 2015

முகம் பார்த்த கண்ணாடி ....

இதயம் ஒரு வைரம் என்றே இத்தனை நாள்
நினைத்திருந்தேன் ....
அது உடைந்ததும் அறிந்தேன்
அதுகும் ஒரு கண்ணாடி என்று
உடைந்த துண்டுகள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு சுய சரிதை சொல்லியது எனக்கு

சிரித்தவருக்காய் சிரித்திருக்கிறேன்
அழுதவருக்காய் அழுதிருக்கிறேன்
சுமை கொண்டோர்க்கு
சுமைதாங்கியாய் இருந்திருக்கிறேன்
உறவென்றும் உற்றார் என்றும்
மனைவி என்றும் மக்கள் என்றும்
தோழன் என்றும் தோழி என்றும்
அனைவருமே முகம் பார்த்த கண்ணாடி
என் இதயம் ....

உடைந்த துண்டுகளை ஒட்டி பார்த்தேன்
ஒட்ட முடியவில்லை
என் இதயக் கண்ணாடியில் ஒவ்வொருவருமே
கல் எறிந்திருக்கிறார்கள்
எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது இதுதாண்டா உலகம்
போதும் உனக்கு வா என்றழைக்கிறது...
Kavignar Valvai Suyen

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...