lundi 6 janvier 2014

கூட்டுக் குடும்பத்தின் முற்றம்..


கூட்டுக் குடும்பத்தின் முற்றம் - குறுக்
கெழுத்துகள் வாழுகின்ற சதுரங்கக் கட்டம்
ஒவ்வொரு சுவர் கட்டங்களுக்குள்ளும்
ஒன்றுக் கொன்றான ஜீவனின் உயிர் நாடி
துடித்துக் கொண்டே இருக்கும்
கனல் மழை என்ன கடும் புயல் என்ன
இந்த முற்றத்தில் வீழ்ந்து
கண் தூசி கொள்ளும் முன்னே
கரைந் தோடிச் சென்றுவிடும்.

திரு, திருவேங்கடம் வேலுப்பிள்ளை..

திரு, திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்
நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று..

எல்லாள ராசாவின் நினைவாலயம் தனில்
தின விளக்கேற்றி நினைந்துருகி தொழுத,
மகான் திருவேங்கடம் வேலுப்பிள்ளை
சேரன் செங்குட்டுவன் போல்...
சிறையிருந்து உயிர் நீத்து மரபு காத்த மாமனிதன்
தேசியத்தலைவன் பிரபாகரனின் தந்தையுமாவார்.. 

நினைந்துருகி நிதம் தொழுவோம் நாம்....

samedi 4 janvier 2014

நாம் என்ன விதி விலக்கா...

உன்னை முதல் முறை பார்த்ததும் விறு விறுத்தேன்
தலைமுறை பார்த்து பின் தணிந்துகொண்டேன்
பரந்த உலகெங்கும் கண்ணை மூடி பால் குடிக்கும்
வெள்ளைப் பூனைகளே நிறைந்து கிடக்கின்றன
விரகத் தீயில் எரியும் முன்னே
தணிப்போம் தாகம் வா...
நாம் என்ன விதி விலக்கா...

vendredi 3 janvier 2014

கால நதியின் நீர்க்குமிழி நீ..


ஓடும் மேகமும் மாறும் காலமும்
காத்திருப்பதில்லை உனக்காக
கால நதியின் நீர்க்குமிழி நீ
ஒரு கரை உனது ஜனணம்
மறு கரை உனது பயணம்
ஜீவன் உள்ளபோதே
காலத்தை வென்றுவிடு..

இராத்திரி நேரத்துத் தாமரைப் பூ..

இராத்திரி நேரத்துத் தாமரைப் பூ
தாவணிக் கனவிலே ஆடுதே
முகில்த் திரை தந்த முத்தங்களாலே
இதழ்களில் பனித் துளி நீந்துதே
கால வசந்தங்களை கை சேர்த்து
கவிக் குயிலே நீ அணைப்பாயோ..

jeudi 2 janvier 2014

தீயை சாட்சி வைத்தாய் எதற்கு..

குங்குமச் சிமிழ் தந்தாய்
உச்சித் திலகம் இட்டு
மாங்கல்யம் தந்தாய்
மஞ்சள் கயிறுட்டு
கற்பு நெறி என்பது
இருவருக்கும் பொதுவே
தீயாக என்னை நீ எரிப்பதற்கா
தீயை சாட்சி வைத்தாய் சொல்.?
 

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...