samedi 2 mars 2019

ஆசிரியர்!!

மழலையர் மனமும் மண்ணின் குணமும்
மறந்தறியார் அசிரியர் மாபெரும் குருவே
அவர் மனம் ஓர் நூலகம்   


புத்தகத்தின் பக்கங்களை புறட்டும் முன்னே
அட்டவணை முறையில் அறிவூட்டுவார் ஆசிரியர்
கல்விக் கூடம் அழைக்க
அழுது கொண்டே வந்தேன்
அன்றென் முதல் வகுப்பறை
வயது ஐந்து

பார்க்காத முகங்கள் பழகாத சொந்தங்கள்
சிலர் சிரிக்கிறார்கள் சிலர் அழுகிறார்கள்
சிலர் முகங்களில்
கண்ணீர் கோடுகள்
காய்ந்திருந்தன
மணி ஓசை கேட்டது
அந்த மணி ஒலிதான்
எமது ஆரம்பக் கல்வியின்
கட்டியம் சொன்னது

அழுகையை நிறுத்திக் கொண்டேன்
வணக்கம் தந்தார் ஆசிரியர்
அவரின் நண்பன் வெள்ளைச் சோக்கு
கரும் பலகையில்
ஒவ்வொன்றாக எழுத எழுத
உச்சத் தொணியில் உரம் இட்டு
உயிர் எழுத்துக்களை
அ ஆ இ ஈ உ ஊ என்றே
அறிவுப் பால் ஊட்டினார் ஆசிரியர்

உயிர் எழுத்துகள் பன்னிரண்டும்
மெய் எழுத்துகள் பதினெட்டும்
உயிர் மெய் எழுத்துகள் இருநூற்று பதினாறும்
வர்ணப் படங்களோடு புத்தகத்தில் இருந்தாலும்
சொல் இயல் சொல்லில் இசையுற
ஓடி விளையாடு பாப்பா
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடிவா என்றே
பாலுந் தெழி தேனுமாய்
தாய்த் தமிழ் குழைத்தூட்டி
எம் கல்விக் கண்ணை திறந்தார் ஆசிரியர்

பிள்ளை மனம் வெள்ளை மனமே - அதில்
வெற்றுடமாய் கிடந்த இருட்டுப் பலகையில்
வெள்ளைச் சோக்காய் உயிர்த்துவம் சேர்த்து
அழகுத் தாய்த் தமிழால்
அன்றாடம் எமக்களித்தார்
கல்வி கற்றதினால்
உலகில் மேதைகள் உண்டு
உலகம் உய்திட உழைக்கும்
உழைப்பாளியும் உண்டு
அகிலம் பற்றி நிற்கும் அன்புக்கு
மூலமும் ஆசிரியரே
அறிவுச் சுடரொளியும் அவரே
ஆசிரியர்களே,
உம்மை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்
நன்றி நன்றி நன்றி
நன்றி எனும் மூன்றெழுத்து மாலை சூடி
வாழ்த்தி வணக்குகிறோம் உம்மை

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...