vendredi 27 juillet 2018

புலன்களை விரட்டுகிறாய் !!!


பொன் நகை வாங்கி பொன் மணி உனக்கு
பரிசம் போட்டேன் பவளம் ஆனதடி
முத்துகள் கோர்த்து புன்னகை செய்து
உதட்டை நனைக்கின்றாய்

நெற்றியில் சந்திரன் குங்கும அழகில்
உன்னை வருடுகிறான்
இந்திரன் என்னை விழிகளில் பூட்டி
விடியல் தருகின்றாய்
அச்சாரம் தந்து முத்தாரம் பெற்றேன்
கோவை கிளிக்கேன் கோபமடி
உன்னிதழ் இரண்டும் கொத்தி சிவந்திட
என் மனம் ஊமத்தம் ஆனதடி
குலுங்கும் செம் பொன் தழுவிதடி

விண் மீன்கள் பறித்து மின்சாரம் செய்வோம்
அனல் விளக்கணைத்து சுடர் ஒளி கொள்வோம்
துயிலறைத் தாழை இடுவோமா
பசித்திடும் மழலை மடி மீதமர்ந்து
அதிரசம் பருகி இருள் மறை உறங்க
விண் மீன்களை அனுப்பி
விடியலை வரவு வைப்போம்
சொல்லடி சக்தி சிவனாகின்றேன்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...