அந்தி மஞ்சம் அழகு நீராடும் அல்லியே
ஆனந்த நர்த்தனை கொடியே
நீ குழிக்க
நீர் வளைகள் உனை அணைக்க
ஆனந்த சுரம் எனக்குள் மீட்டுகிறாய்
அன்றலர்ந்த அழகே உனைத் தொட்ட ஆதவன்
அந்தப்புறம் தனில் உனைவிட்டுச் சென்றான் எனில்
காரிருள் சூழ்ந்தும் உன் பருவம் பொய்த்ததில்லை
மலர்ந்தும் மலரிதழ் மூடி மௌனிக்கின்றாய்
யாரும் காணார் உன் வதனம்
கொடி இடை நீராட அலை ஒலி கொலுசொலிக்க
சந்திரன் வந்தாலென்ன இந்திரன் அழைத்தாலென்ன
ஆதவன் இல்லையேல்
இமைக் காவலுக்குள் நீ ஏற்பது விரதம்
விடியலுக்கே எழுதுகிறாய் விழி மடல் கடிதம்
விரகதாபம் இல்லையடி அதோ வருகிறான் ஆதவன்
பாவலர்
வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...