jeudi 27 juillet 2017

மது!!


வாழ்ந்து பார்த்தேன் வாழ்வும் வளமும் எதிலும் சுகம்தானே
ஏனோ வீழ்ந்தேன் மடமை யினாலே மதுவின் மடிமேலே
மயக்கம் தீரலையே மனசும் ஆறலையே !

உன்னை தொட்டேன் நான்தானே மதுவே  
என் உள்ளம் புகுந்து ஆட்டுகிறாய்
குணமும் கெட்டு உறவும் விட்டு
ஊதாரியாகி சிரிக்கின்றேன்
தெரிந்தும் நானே நடிக்கின்றேன்
ஈகோ தானே என் கிரீடம்
ஆணவம் எனது சிம்மாசனம்
நல்லவன் தானே நானும் உன் துணை இல்லாமல்
மதுவே மதுவே எனக்கு நீயேன் மந்திரியானாய்
வீதியில் வீழ்ந்தும் சகதியில் புரண்டும்
ஊரார் சிரித்திட ஏனோ வாழ்கின்றேன்

ஏன்தான் துயரம் ஏனோ மயக்கம் எனக்குள் பூகம்பம்
உயிரும் உறவும் பட்டிணிச் சாவில் துடித்தாலும்
ராச்சியம் இல்லா ராஜா நானே பரியில் போகின்றேன்
குடிப்பவனே என் கூட்டாளி
பெருங் குடி மகனாய் ஊதாரி
தூயவனா நான் கொடியவனா மதுவின் காதலனா
கட்டிய தாலியும் கம்மல் வளையலும் அடகுக் கடையிலே
அவள் கலங்கியே அழுதும் காணா இன்பம்
வோதை மயக்கத்திலே
வீதியில் சீதையின் வார்த்தை கேட்டேன்
தீயில் குளித்திட தினம் தினம் உதைத்தேன்
தீயில் குளித்து தீயாய் எரிந்து தூயவள் போணாளே
மதுவே மதுவே என்னை குடித்திடு
மயக்கம் வேண்டாம் மரணம் வேண்டும்
இழி நிலை வாழ்வு இனியும் வேண்டாம்
என்னை நீயே கொன்றுவிடு....

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...