சாலையிலே சோலைக் குயில் கூவுதம்மா கூவுதம்மா
தாளாத சோகத்திலே மூழ்குதம்மா மூழ்குதம்மா
ஊரும் இல்லை உறவும் இல்லை
நேசம் கொள்ள யாரும் இல்லை
செஞ்சோலை வாழ்ந்த குயில் செய்ததென்ன குற்றம் அம்மா
தாயே பசி எனும் கீதம் தாளாத பிஞ்சுக்குள்ளே ஓலம்
ஏன் பிறந்தேன் என்றுங்கே ஏங்குதம்மா
ஏதிலியாய் தினம் தினமாய் வாடுதம்மா
ஆதரிப்பார் யாரும் இல்லை அன்பு செய்ய நேசம் இல்லை
ஊருக்குள்ளே ஓடுதிங்கே இதன் ஓசை நதி
ஓடக்கரை கால்வாயிலே இதன் ஜீவ நதி
போர் முடிந்தால் வாழ்வு வரும் என்றாரே
வீரம் வீழ்ந்த பின்னே மண்ணிலொரு இறைவன் இல்லையே
வசந்தம் இல்லா வாடைதானே வடக்கில் இங்கே வீசுதம்மா
உதயம் தந்த
சூரியனால் கிழக்கில் ஒளி இல்லையம்மா
ஏர் பிடித்த நாளை எண்ணி எத்தனை நாள் வாழ்வதிங்கே
வரப்புயர வாழ்வு தரும் மன்னவரே சின்னவரே
மனசிருந்தா மார்க்கம் உண்டு
வீதி வாழ் குயில்களுக்கு வேடம் தாங்கல்
தாருங்களேன்....
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...