samedi 21 janvier 2017

ஒற்றை நாளில் வெற்றி தருவதல்ல போராட்டம்



ஒற்றை நாளில் வெற்றி தருவதல்ல போராட்டம்
அற்றைத் திங்களெல்லாம் அனுதினமே போராடு
வெற்றி நிச்சயம்
பொங்கு தமிழே நீ பொங்கு பொங்கு மங்காச் சனி அழித்து
விண்ணையும் உன் தமிழ் கொடி முட்டட்டும் தடையது உடையும்
தமிழினம் மிழிரும் தாழ்ந்தவர் ரென்று எவனும் இல்லை உலகில்
பாவலர் வல்வை சுயேன்

vendredi 20 janvier 2017

ஈரடியும் ஓரடியாய்...



ஈரடியும் ஓரடியாய் சுட்டெரித்த சூரியனை
தொட்ட நிலாவே
அவன் சுடர் பட்டதினால் பத்திக் கிட்டாயோ
பருவ நிலாவே
பனி படர்ந்த சிலையை போலே
பகல் இரவு தெரியவில்லை
இதயம் பரிமாறி தொடர்கின்றாய் என்னை நீ  
நீலக் கடல் தரை வந்து உன் பாதம் கொஞ்சதடி

தரை மீதில் எத்தனையோ
வண்ண வண்ண ஓவியங்கள்               
அத்தனையும் உனக்காக
மணல் நண்டுகள் தீட்டித் தீட்டி
உன் பாதச் சுவடுகளில்
ஆசை முத்தம் இடுகின்றன
மலரே உன் மடியில் சாய்ந்தேன் நானே
செல்பிக்குள்ளே என்னை வைத்தாய்
பூந் தோப்புத் தேனே
நிலா காலம் நீதானடி உன்னோடு என் ஊர்கோலம்
இருளேது இனி நம் வாழ்வில்
இரவும் பகலும் ஒன்றே ஒன்றுதான் .....

பாவலர் வல்வை சுயேன்

mardi 17 janvier 2017

ஜல்லிக்கட்டு, தடையதை உடை !!!!



ஜல்லிக்கட்டு கட்டு கட்டு தமிழா நீ எழுந்து மல்லுக்கட்டு
உன் வீரம் என்னாகும் சல்லிக் கட்டி போடு மெட்டு
டெல்லி தடுத்தாலென்ன பீட்டா குலைத்தாலென்ன
குதர்க்கம் கொள்ளவந்த நச்சு நாகங்களை
ஓரம் கட்டு ஓங்கி வாளால் வெட்டு
பண்டைத் தமிழன் வென்று தந்த முதுசமடா
இன்றும் காளையோடு காளை மோதும் வீரமடா
வீழ்வானோ தமிழன் வீரம் அறுந்து
சோரம் போகாதே தம்பி
அன்னை தந்த பால் ஆண்மை குறைந்திட
தன்மானக் குனிவேதடா
காளையோடு காளை மோதி
களம் கண்டு வந்த வீரமடா
வீரம் செரிந்த மேனி தனில் குருதி குளித்து
உவகை கொண்டது உள்ளமடா
காளையும் எங்கள் தோழன்தானே
களம் மோதும் நல்ல நண்பன்தானே
பாசமும் நேசமும் ஊட்டி ஊட்டி
வீட்டினில்தானே வீரம் வளர்த்தோம்
வாடா பதரே வாடா
பேரிடி முழக்கம் முழங்கி
பகையே உன்னை அறுப்போம்

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...