samedi 8 février 2014

என் முன்னே நின்றன மீன்கள்...!


வறண்ட பூமி கண்டு தண்ணீர் வேண்டி

இறைவனிடம் போயிருந்தேன்..

தண்ணீர் இன்றி வாழ.! வரம் கேட்டு.!

என் முன்னே நின்றன மீன்கள்...!

vendredi 7 février 2014

எண்ணி வரவில்லை நான்..!


எண்ணி வரவில்லை நான்..!  நீ இப்படிச் செய்வாய் என்று..!

நான் தொடாத பாகங்களை,  ஆசையுடன் தொடு என்கிறாய்..!

தொட்டுத் திளைக்கிறேன் கட்டித் தவிக்கிறேன்

நான் எழுதும் கவிதையே.., என்னை நீ

கொள்ளை கொண்டுவிட்டாய்...    

சந்தைக்கு போன ரோஜாவே..


சந்தைக்கு போன ரோஜாவே பாதியிலே

திரும்பிவிட்டாய் என்னாச்சு ..?

கொள் முதலும் வேண்டாம் என்று

கொண்டவனை அங்கு விட்டு, வந்துவிட்டேன்..... 

சீதணக் கொடுமையில் பெண்கள்...!

jeudi 6 février 2014

எங்கும் தேடினேன் கிடைக்கவில்லை..


ஒரு நாள் துலைந்தாள் என்னுயிர் தோழி
எங்கும் தேடினேன் கிடைக்கவில்லை
அம்மா சொன்னாள், இன்று அமாவாசை..

இயற்கை கோபிக்கிறது உன்னை பார்த்து..


இயற்கை கோபிக்கிறது

உன்னை பார்த்து

நன் நீர் எங்கும் கூவம்

நிழல் இழந்த நிலத்தில்

காச்சல் உதடுகள்...

mercredi 5 février 2014

ஒரு நாள் என் நிழல்..


ஒரு நாள் என் நிழல்
எனக்கு நன்றி சொல்லியது
நிமிர்ந்து பார்த்தேன்
உச்சிவெயில்..

பாவலர் வல்வை சுயேன்

இல்லை, அதை நான் அறியேன்..


என்னை பார்த்து சிரித்தது உலகம்
கோபம் கொள்ளவில்லை
ஏன் என்று கேட்டேன்..!!
குணங்களில் கவர்ந்த
காம, விரோத, தாம, தண்ட
கொலை, கொள்ளைகளை
செய்தாயா என்றது..??????
இல்லை அதை நான் அறியேன் என்றேன்
நீ மனிதனே இல்லை எனச் சொல்லி
மீண்டும், என்னை பார்த்து சிரிக்கிறது...!

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...