vendredi 17 février 2017

காமம் அல்ல !! மோகம் அல்ல !!


பற்றில்லா பந்தம் வந்து ஒட்டிக் கொண்டதால்
முத்தம் தந்த துளியை வெள்ளம் அடித்துச் சென்றது !     
ஓடிச் சென்று ஒதுங்கிய துளிகள்
ஒளி தொடா பாகத்தில் ஒட்டி நிற்க
இமைக் காவல் மீறிய உன் கரு விழிகள்              
அறியா மொழியென மூடி வைத்த புத்தகத்தை
மொழி பெயர்த்துத் தந்தன என்னிடத்தில் !
வாசகன் வாசிக்கின்றேன் உன் நேசம் அறிந்தே
காமம் அல்ல மோகம் அல்ல
அனைத்தும் கடந்த மெஞ்ஞானம் நீயே ....

பாவலர் வல்வை சுஜேன்


lundi 13 février 2017

அன்பு மலர்கள் !!!

மலர்கள் பூத்திருக்கின்றன நீ வரும் வழியில்

உன் பாதம் நோகும் என்று

இதயச் செடியில் எந் நாளும் பூக்கட்டும்,

அன்பு மலர்கள்

காதலை காதலால் கனிவு செய்வோம்..  



பாவலர் வல்வை சுயேன்

dimanche 12 février 2017

நீ எங்கே போகிறாய் !!!


நிலம் விட்டு புலம் பெயர்ந்த மென் மனமே

நீ எங்கே போகிறாய்....

காற்றும் வெப்பமும் கடும் குளிரும்

கூட்டாட்சி போரில் உன்னை அடித்தனவோ

தாளாது தணிந் துருகி மழையாய்

உன் மண்ணுக்கே வந்துவிட்டாய் 

நதியாய் நாணலாய் நடமுற்று

சங்கமக் கடலில் கலந்த ஜீவிதமே

சிலையாகினேன்

நின் ஜீவன் மண்ணுக்கே எழுதப்பட்ட

பட்டையக் கணக்கென கண்ட பின்னே



பாவலர் வல்வை சுயேன்

நீ எனக்கானவளே !!!!


உன் ஒற்றை விழிப் பார்வையே ஈர்ப்பு விசை ஈட்டியடி

அணை போட்டு வைத்திருக்கிறேன்

துணைவனாய் உன்னருகே வரும் வரை!

மலர்ச் செண்டே உனை நாடும் வண்டுகளிடம்

இதழ் முத்தம் வாங்கிவிடாதே நீ எனக்கானவளே


பாவலர் வல்வை சுயேன்

jeudi 9 février 2017

உன் தாய் நிலம் உனக்கே சொந்தம் !!!!


விடி வானம் சிவந்து விடியல் பருகி விழி மலர

உதிர்ந்த மரங்களாய் உதிர்ந்தன உயிர்கள் 

கூனி வளைந்து குறுகியது கேழ்வி

பாரா முகமாய் பதில்கள் சிதைந்திட

யுத்தத்தின் மொத்த ரணங்களோடும்

திறந்த வெளிச் சிறையில் எஞ்சிய எச்சங்கள்

கானல் வாழ்க்கை கண்ணீர் குளத்தில்

ஊற்றுத் துளிகள் உறங்கா இருளில்     

விடிவில்லா எச்சமாய் விடிவின்றித் துடிக்கிறது

இன்று கேபாப் புலம் நாளை எவ்விடமோ

மடிந்தோம் என்று மனம் குன்றாதே

விடிவுண்டு நிச்சயம் எழுந்து போராடு

உன் தாய் நிலம் உனக்கே சொந்தம்       



பாவலர் வல்வை சுயேன்

mercredi 8 février 2017

உயர்ந்த உள்ளம் ..

மனமே மாளிகையானால் உயர்வென்ன தாழ்வென்ன
கிரகப் பிரவேசத்தின் குடியிருப்பில் பேதம் கொள்ளாது
உயர்ந்தவர் உள்ளம்

பாவலர் வல்வை சுயேன்

lundi 6 février 2017

கண்ட பின்னே சொன்னார் !!!

விண் தாரகைகளோடு நின்று குலாவும் நிலாவே
வெட்ட வெளி மீதிலும் நீ சட்டை போட்டதில்லை
குட்டை குளம் வெறுத்து நீந்தாமல் விலகவில்லை
அண்ட வெளி நின்று ஆதவன் ஒளி அள்ளி
கொடி இடை நீராடும் தாமரையின் இதழ் பரிசம் இட்டு
விடியல் வரும் போதில் விளக்கணைத்துப் போகின்றாய்

விரகம் எனச் சொன்னோரும் விழிப் புலனற்று
கால் நடையில் கார் இருள் கிடந்தோரும்
கண்ட பின்னே சொன்னார்
உண்பதற்கே இந்த ஊனும் உடலும் என்று
நிலாவே நீ வாழி   

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...