vendredi 7 octobre 2016

தமிழீழத்தின் மூத்த தளபதிகளின் நினைவோடு ....



கண்ணே கண்ணே உன் கண்ணுக்குள் காயங்கள் கனவா நினைவா
கடலிலே கடல் புறா வஞ்சனை விரிப்பிலே வீழ்ந்ததும் நினைவா

கள வேலி போட்டு வைத்தோம் கடல் எல்லை வகுத்து வென்றோம்
ஏதிலியாய் போனதில்லை அந்த நாளிலே
வீர வியூகம் வென்று வென்று வீர விதை இட்டு வைத்தோம் 
சொந்த நாட்டிலே

சாவுக்குள்ளே போர்க்களம் சந்ததிகள் வாழத்தானே
சுய உரிமை தேடிச் சென்றோம் தமிழீழம் காணத்தானே

உள் நாட்டுப் போரிலே ஊன்றிய வேர்ரறுத்து
பாரதப் படையணி பாதகம் செய்ததேன்
அமைதி அலை ஏறிச் சென்ற எம்கடல் புறாக்களை
வஞ்சக வலையினில் வீழ்த்தியே மாய்த்ததேன்  
அமைதிப் படையென உலகெலாம் முத்திரை
அனாகரீக கழுகுகள் தமிழரின் குருதிப் புனல் குடித்ததேன்

எம்மை காத்தவர் எம் மண்ணை காத்தவர் சிறையினில் கிடப்பாரோ
சிங்கள இந்தியம் பின்னிய வலையினில் சிரம்தனை கொடுப்பாரோ
குமரப்பா புலேந்திரனும் உடன் பத்து வேங்கையும்
கொள்கையில் நஞ்சுண்டு தமிழீழமே தாகம் என்றார்
எங்கள் வீரர்கள் எங்கள் காவலர் எங்கள் மன்னவர் இவர்களல்லவா
அண்ணன் சொல்லின் வேதம் காத்த மாவீர மறவர்கள் உன் மாமான் அல்லவா
கண்ணே கண்ணே உன் கண்ணுக்குள் காயங்கள் கனவா நினைவா
கடலிலே கடல் புறா வஞ்சனை விரிப்பிலே வீழ்ந்ததும் நினைவா

பாவலர் வல்வை சுயேன்

mercredi 5 octobre 2016

உன் நிலை உயரணும் தங்கைச்சி !!!



ஊர் உறங்கி உறைந் தொழுக ஊளை நாய் ஒலி கேட்டும்
அன்னவன் அருகமரும் வரவை எண்ணி
உறங்கா விழி தனில் வளி நோக்கும் மான் விழியே
புன்னகை செய்வார் கோடி
புறம் பேசி அறம் கொல்வார் கோடி
உன் நீதி காப்பேன் உயிரே
உன் நிலை உயரணும் தங்கைச்சி

காதலின் காதல் நீங்கி ஈருடல் ஒவ்வாதெனில்
கார்மேக நீர்ரூற்றில் பருவம் துளிர்ப்பதில்லையே 
பொய்யா மொழி புனைந்து மன்னவனை வரவிருத்தி
பந்தி பரிமாறி விருந்தோம்பும் வடிவழகே
கருக்கலிலே விளக்கு வைச்சு விழிக் கோலம் போடு நீ
உன் கோலம் கண்டார் கோடி யாலமதில் வெல்வாரோடி

இதை காம நோயென கண்டவர்கள் சொன்னால்
சிற்பங்களும் சற்பங்களாகி சந்ததியை சாபம் இடும்
சினம் தணித்து பாடுவீர் காண் காதலுக்கோர் கீதம்
வையகம் தனில் பெய்யெனப் பெய்யும் மழை

பாவலர் வல்வை சுஜேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...