samedi 6 août 2016

விசமும் தேனும் மருந்தெமக்கு !!!



வேதனை என்றும் வேப்ப மரம்
சாதனை எமக்கே கள்ளி மரம்
போதனை விழுதின் ஆலினைப்போல்
வீழ்ந்தே நிமிர்கிறோம் அனு தினம்
விசமும் தேனும் இல்லை என்றால்
வாழ்வில் இல்லையே லெட்சியம்  
பெண்ணின்றி உலகில் ஏதடா பேதமை செய்தல் வீணடா
என்னென்பேன் ஏதென்பேன் சின்னவனே உன் தாயே பெண்ணடா

பாவலர் வல்வை சுயேன்

vendredi 5 août 2016

கடந்த கால கிளிஞ்சல்கள் !!!!



கண்ணே கலையா ஓவியமே கை இருப்பில் ஒன்றை வைத்து
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் பொய் யல்லடி தோழி
போனவள் போனாளடி திரும்பவில்லை என்னிடத்தில்
உன்னிடத்தில் என்னைத் தந்து எனக்குள்ளே
உன்னை வைத்தேன் மன்னிப்பாயா மறப்பாயா என்னை நீ

கடலும் ஓர் நாள் கலங்கித்தான் தெளியும் கலங்காதே தோழா
எண்ணில் ஏழு காதலன் என் எண்ணக் கதவை திறந்து சென்றான்
முதற் காதலை முன்னுரையாய்
உன் காதலை முற்றுப் புள்ளியாய்
முந்தானை முடிச்சில் சேர்த்துவிட்டேன்!
மெய் உரைத்த உன்னிடம் பொய் உரைப்பேனா
மறப்போம் மன்னிப்போம் கடந்த கால கிளிஞ்சல்களை…..
                                                                                                             
பாவலர் வல்வை சுயேன்

mercredi 3 août 2016

ஆராதனை முடியவில்லை !!!!!



நித்திய அபிசேகம் நனைந்தேன் ஆராதனை முடியவில்லை
முப்பாட்டனின் கட்டில் முன் கோபம் உற்று மூச்செறிந்தும்
பூகம்பக் கோளங்கள், பூவையின் புனல் விழிக்குள் !!
அன்று பாஞ்சாலி இன்று சரவணன் மீனாட்சி
ஒருத்தனுக்கு ஒருத்தி எனும் பாரதப் பஞ்சாங்கம்
கால் மேலாய் வாசிக்கப்படுகிறது 
ராகு காலத்திலும் !!
மார்கழித் துளியின் உயிரும் உருகி உயிர் காய
ஆதி மனிதன் கண்ட சிக்கி முக்கிக் கல்
சித்திர விழிக்குள்ளே சிரஞ்சீவியாய் எரிகிறது !!!!

பாவலர் வல்வை சுயேன்

mardi 2 août 2016

நினைவுத் துளிகள்...

அனைத்து நட்புறவுக்கும் எமது இனிய வணக்கம்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...