dimanche 8 mars 2015

vendredi 6 mars 2015

இனப் புயல் நிறுத்தி சரித்திரம் படைப்போம் ...


இனப் புயல் இங்கு வனப் புயலானதடா தம்பி – தினப்
புயலாலே அகதியாய் இன்னும் அலைவதேனடா
மூடக் கொள்கையில் இன்னுமா நீ உன்முதுகை பாரடா
கேழ்விக் குறியாய் வளைந்த வாழ்விற்கு நீதி தேடடா
தீண்டாமை சொல்லி யாதித் தீயிலே தீய்ந்து போகிறாய்
சுதந்திர வாழ்வை சுறண்டலில் தொலைத்து  
சிறையில் தேடுறாய்...
 
மானம் ஒன்றுதான் மரபுப் போர் உடை
மசக்கையாலே நீ மாற்றான் கால் நிலை
அகரம் எழுதி அறிவைச் சேர்த்த
அழகு ஈழமடா
உலைக்களத்தாலே உருகிக்கிடக்கிதே
உன் உறவின் ரெத்தமடா
கடித்தால் பறிக்கும் கழுத்துக் குப்பியே
மானச் சேலையடா
பூவரசம் வேலிக்குள் புலுணிக் குஞ்சுகள்
புலியாய் மாறி புனர் ஜென்மம் எடுக்கலையா
உலக வானில் தமிழனின் சான்றாய்
புலிக்கொடி உயரலையா
கனிந்த பழம்தான் தமிழரின் ஈழம்
கையில் கிடைக்கும் காலம் இது
இணைக் கரம் பற்றி விடிவினை தேடு..
 
சமர்க்களம் ஆடிய வேங்கைகளாலே மலர்ந்தது ஈழம்
அது வஞ்சனைக் கொடியவர் வாரி இறைத்த
கொடும் தீயினில் வீழ்ந்து இருண்டது மீண்டும்
நம் சந்ததி வாழ சரித்திரம் படைப்போம்
சாயம் வெழுக்கவில்லை துணிந்தே வெல்வோம்
கிழக்கை தோண்டிட ஒன்றாய் வாடா
நன்றே விடியும் நாளை நம் தேசம்
உலகப் பந்திலே தமிழனின் காலம்
வாடா தம்பி வாடா...
இனப் புயல் நிறுத்தி சரித்திரம் படைப்போம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாகமடா..
 
Kavignar Valvai Suyen

mardi 3 mars 2015

ஏழை நூலில் ஆடும் செல்வா,,,


கண் மணியே கண்ணுறங்கு... கதிரவனே கண்ணுறங்கு...
ஏழை நூலில் ஆடும் செல்வா,,, என் செல்வமே நீ உறங்கு...
அரசு தந்த அரிசி கிள்ளி கஞ்சிக்கலயம் வச்சிருக்கேன்
குறுனலோடு கூழாங் கற்களும் குதித்தவியுதே பொறுத்துறங்கு
கண் மணியே கண்ணுறங்கு...
 
வகிடெடுத்த வாழை மீனை  அம்மி அரைத்து குளம்பாக்கி
வசஞ்சு ஓடும் வஞ்சிரன் மீனை பொரித்து மெல்ல பொடியாக்கி
வாய் அமுது ஊட்டத்தானே தாய் மனசு ஏங்குது
மழலை உன் வதனம் பார்த்து வான் நிலவும் ஒழியுது
ஏழை நூலில் ஆடும் செல்வா என் செல்வமே நீ உறங்கு
 
நீண்ட நாள் அழுதுவிட்டேன் விழி நீரும் முடிஞ்சுதடா
கார் முகிலாள் கொட்டுகிறாள்  உன் அமுத வாயில் துளி முத்து
சாமம் இப்போ மூன்றாச்சு ஊரும் உறங்கி நேரமாச்சு
முத்த மழை துளி குடித்து தூளியிலே நீ உறங்கு
கண் மணியே கண்ணுறங்கு... கதிரவனே கண்ணுறங்கு...
ஏழை நூலில் ஆடும் செல்வா,,, என் செல்வமே நீ உறங்கு...
Kavignar Valvai Suyen

பித்தன் நானடி...


போதும் உன் பார்வை கொல்லாதே என்னை
வெற்றுக் காகிதமாய் கிடந்த என்னை
கைவரி வளையலிட்டு
புன்னகை பூத்தூவி
புதுக் கவியே வருகவென
விழிகளால் அழைக்கிறாய்..
பித்தன் நானடி சத்தியமாய் உன்னிடத்தில்
என்னை எழுத வைத்தவள் நீதானே....
Kavignar Valvai Suyen

dimanche 1 mars 2015

ப்பைர்,ச் சுவாலை...


ஆனதைச் செய்ய மறந்து
ஆசை எனும் ஓடையில்
தடங்களை,
தொலைத்துவிட்டேன்...
நான் குடைக்குள்
நீ மழையில்... 
ப்பைர்,ச்  சுவாலை கண்டு
தீயணைக்கும் பிரிவனரும் ஓடோடி வருகிறார் 
அவர்களுக்கும் தெரியவில்லை போலும்
உன்னை அணைக்க தண்ணீர் தேவையில்லை என்று...

Kavignar Valvai Suyen

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...