jeudi 13 février 2014

அஸ்த்தமம் என்பது இருவருக்கும் ஒன்றுதான்..!

இதயத்துள் இதயம் வைத்து - உதய
ஒளி கண்டு விட்டோம்..
ஒருவரை ஒருவர் முதலில்
விட்டுச் செல்லும் போதில்
அஸ்த்தமம் என்பது
இருவருக்கும் ஒன்றுதான்..!
அதுவரையில்,
உயிரெனும் மெய் ஒளியின்
நெய் விளக்கணையாமல்
வாழலாம் வா.. என், அன்பே..!

காதலர் தின இனிய நல் வாழ்த்துகள்..


காதல்., காதல்., காதலென்றே காணும் இன்பம் கோடி.! 
இதை வாழ்வில் ஓர் நாள் இணைந்தே.. சுரம் மீட்டி.!
திளைப்போம் கூடி..!
முற்றுப் புள்ளி இல்லாதது.. காதல்!
முடிவுரை தொடாதது.. காதல்!
ஒரு விழி அழும் போதில்
மறு விழி சிரிப்பதல்ல.. காதல்!
உடல் பசி சுவை கொள்ளும்
பஞ்சாமிர்தமும் அல்ல.. காதல்!

நெஞ்சறை தனில்  - வெண்
சாமரைத் தென்றல்
கொள்வதே.. காதல்!

பயணங்கள் முடியும் பாதைகள் தொடரும்
பாரினில் புது பூக்கள் மலரந்து வரும்
நீ இன்றி போனால் என்ன.?
எண்ணற்ற காதலர்கள்
உன் பெயர் சொல்லி மகிழும்
இதுவே.. உன்னதக் காதல்..!

mardi 11 février 2014

விழி ஓரத்தை வருடுகின்றன விரல்கள்...


பெற்ற அன்னை..,

உன்னை, விட்டுப் போயிருக்கலாம்..!

அவளின் மரண அழைப்பிதழுக்கு..! 

 ஆனாலும்..,

அவள் விட்டுப் போயிருக்கிறாள் ..!

தன் உசிரை...., உன்னோடு...!

வலிகள் நிறைந்த பாதை..!

உறைந்த உயிரோடு நீ..!

விழி ஓரத்தை வருடுகின்றன விரல்கள்...

மரணித்துக் கொண்டது அந்த நூறு..!


எதிர் பார்க்கவில்லை அவள்..!

தான்., மன்னிப்பு எழுதும்..!

அந்த, நூறு ரூபாய் நோட்டை..!

முகவரி அறியாமலே..,

அந்த சில நிமிடத்திற்காக..!

அவளின் தம்பி

அதை கொண்டுவந்திருந்தான்..!

உடன், மன்னிப்பு கேட்டு..!

மரணித்துக் கொண்டது அந்த நூறு..!

இது விபச்சாரியின் விலாசம்.. ...

dimanche 9 février 2014

யாழ்/வல்வெட்டித்துறை..

யாழ்/வல்வெட்டித்துறை
இந்திராணி வைத்தியசாலையின் புதிய அவசர சிகிச்சை பிரிவு இது.

மதிப்பிற்குரிய முதல்மை டாக்டர் திரு,மயிலேறும் பெருமாள் அவர்களின் அயரா முயற்ச்சியில் வளர்ந்து தன் பணி செய்திட காத்துக் கிடக்கிறது.........
டாக்டர்களின் பற்றாக்குறையினால் இன்னும் நடைமுறை படுத்தப்படவில்லை..

விடியலை தொடவேண்டும் விழியே...


கைவளையும் காகிதப் பூவும் தானே
எம் சிறை இருப்புக்கான சீர்கள் ..!
கனாக் காண்பதற்காகவா..?
இருளோடு உறவாடும் உன்னை
சினேகம் கொண்டேன்..!
மஞ்சள் குளித்து மௌனம் காத்து
மரணித்துக் கிடக்கிறோம் இன்னும்..!

பெத்துப் போட ஒரு இயந்திரம்..
சமைத்துத் தர ஒரு இயந்திரம்..
மண் குடிலின்  கிழிந்த பாய்களாய்
இன்னும் பெண்கள்..!
விடியலை தொடவேண்டும் விழியே
திறந்து கொள்.! உன் சிறைக் கதவை.!
 

தேனிசை, அலை பாயக் கேட்டேன்..!


தேனிசை,  அலை பாயக் கேட்டேன்..! 

அந்த மன்றில்..!

இருந்தும் அங்குள்ளவர் மனசில்

இனம் புரியாத சலனங்கள்..!

சிலர் அழுகிறார்கள், சிலர் சிரிக்கிறார்கள்!

சிலர், துன்பச் சுமை தாங்கி நெஞ்சடைத்து நிற்கிறார்கள்

அன்னைக்கு மறு ஜனனம்.! பிள்ளையின் புது ஜனனம்!

நலம் காத்து தருகிறது மழலைகளின் பிரசவ விடுதி....

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...