பிதா பரிசுதன்
பாலன் யேசு
பூமியில் வந்து பிறந்தாரே
நத்தார் தினத்தில்
நலங்கள் பெற்று
இறையருள் பாதம்
தொழுவோமே
நாம் இறையருள்
பாதம் தொழுவோமே
மார்கழி திங்களில் மாட்டுத்
தொழுவத்தில்
ஏழை குடிலில் இறை பிறந்தார்
எல்லா ஜீவனும்
ஒன்றே என்றே
தூய ஞான ஒளி ஏற்றி
தன்னையே தந்தார்
ஒளி தரும் தீபங்களே
வென்றாடுங்கள்
விழிகளால் தூய ஒளியினை
ஏந்தி
அகம் சேருங்கள்...
குற்றம் அற்றோர்
இல்லை என்றே
அறிவற்றோர் கண்களை
திறந்து வென்றார்
யேசு அன்பால்
தீமையை அகம் எரித்தார்
உனக்கெது வேண்டுமோ
கொடு கொடு அதையே
பிறருக்கும் கொடு என்றார்
கயமையாளர் கட்டி
அடித்தும்
மறு கன்னமும்
காட்டி முகம் மலர்ந்தார்
மாசுள்ளோர் மமதையை
புதைத்து புலர்வு தந்தார்
முள் முடி ஏந்தி சிலுவை
சுமந்து உதிரம் சொரிந்தாலும்
மூன்றே நாளில் மீழ்
உயிரேற்று அருள் புரிந்தார்
தேவன் யேசு அருள் புரிந்தார்
வணங்கியே வாழ்வோம்
தேவனின் பாதம்
போற்றியே பாடுவோம்
பலனின் வேதம்
வாருங்கள்
தோழர்களே, நாம் கொண்டாடுவோம்
நத்தார் வைபோகம்....
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...