அழகனென்பார் அழகி என்பார் இத்தனை நாள்
எங்கிருந்தார்
ஊரும் இல்லை உறவும் இல்லை இன்றநெற்றில்
இதயம் என்பார்
ஆம்பல் தூபம் அழகிய பேச்சு ஆடைகட்டிய
நிலாவென ஆனந்த உலா
நான்கு கண்கள் கொஞ்சநேரம் கொஞ்சும் முலாம்
கொஞ்சம் கொஞ்சம்
அஞ்சேலென அருள்கூர்ந்து அள்ளிடுவார்
அந்தரங்கம்
தென்றலென தொடாதே வரும் திங்களெல்லாம் தீதே
வா,சாந்தியும் வசந்தியும் நுண்ணிய வைரஸ்சே
கவசம் இல்லா சுவாச மிகையாலே
விசுவாசம் இல்லா வைரஸ் உன்னுயிர் தின்னும்
தாம் தினக்க ததிக்கினத்தோம் தோம் தோம்
தடுப்பரன் இல்லையேல் தம்பி தங்கைகளே
சாந்தி முகூர்த்தம் பிணத்துக்கித்தான்
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...