mercredi 27 novembre 2013

விழித்தெழு தமிழா நீ விழித்தெழு...


விழித்தெழு தமிழா நீ விழித்தெழு  
நீ விடிவின் அருகில் முடியும் உன்னால்
வியூகங்கள் மாற்றி விடிவினைதேடு     
நீ விழித்தெழு..  
அண்ணன் காட்டிய அற நெறி போரில்
அறுபடை யானதடா அதை அள்ளி எடுத்திட
வெள்ளி முளைக்கயில் ஆதிக்க தேசத்தின்
சன்னதம் எழுந்ததடா
விழித்தெழு தமிழா நீ விழித்தெழு..                    
தோளில் ஆயுதம் நெஞ்சில் தாயகம்
குப்பி மாலையே கவச காப்பகம்
தாயக பூமியை தரவுகளாக்கு
தமிழீழம் ஆகுமடா
அதில் தங்கையும் எழுந்து
வெங்களமாடியே பகமை எரித்தாளடா   
விழித்தெழு தமிழா நீ விழித்தெழு..  
 
உடலை கொடுத்தோம் உசிர கொடுக்கல
உதிரம் சிந்தினோம் உறவை பிரியல
துயிலும் இல்லமும் தூபியும் இழந்தோம்
துறவி யானதில்ல
உழுதவன் இனத்தை உழுதே எழு
தாயகம் மீழுமடா
நீ அழிவை கண்டு அஞ்சி கிடந்தால்
அதர்மம் கொல்லுமடா
உன்னை அதர்மம் கொல்லுமடா  
நீ விழித்தெழு..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...