mercredi 8 janvier 2014

பசியெனும் பாத்திரம் சிந்தை கொள்ளவில்லை..


பசியெனும் பாத்திரம் சிந்தை கொள்ளவில்லை
என்னை விற்றேன் பசித்தவனுக்கு
பிணமும் தின்னா பண நோட்டுக்கள்
பஞ்சணையில் என்னை பார்த்து சிரிக்கிறது
விசுவாச நாய்கள் இரக்கத்தோடு தொடுகிறது
விசர் நாய்கள் இம்சையோடு தின்கிறது
நெடுந்தூர இரவுகளில்
நெஞ்சணையில் சுமக்கிறேன் இவர்களை
கதிரவனை காண ஆசை கொள்வேனா
கண் இழந்துவிட்டேன்
நோயும் தின்கிறது என் மேனியை...

1 commentaire:

  1. கொண்டையில் தாழம் பூ கூடையில் என்ன பூ - அட அவங்கதானா கலக்கிறாங்கப்பா..

    RépondreSupprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...