lundi 6 janvier 2014

உனக்குமா, இது உச்சி வெயில் கோலம்..

மனதாளம் கொண்டதடி உன் மீது
நான் கொண்ட காதல்
நீ கொண்ட காதல்
கடல் ஆளம் என்றால்
முத்தெடுக்க,
அங்கும் வருவேன் நான்
காலை நேர ஈர முற்றத்தில் தானடி
நான் போட்டேன் காதல் கோலம்
பிறருக்கு இது மாக்கோலமாகலாம்
உனக்குமா,
இது உச்சி வெயில் கோலம்
நண்டாக நான் போட்ட கோலங்களை
அலையாக எழுந்தே அழித்துவிட்டாய் நீ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...