vendredi 31 janvier 2014
jeudi 30 janvier 2014
mercredi 29 janvier 2014
mardi 28 janvier 2014
lundi 27 janvier 2014
dimanche 26 janvier 2014
samedi 25 janvier 2014
கர்வத் தேர் ஏறிச் சென்றவன் நான்..
ஆண்
ஆண் எனும் வீறாப்பில்
அகங்கார
மமதை உடன்கர்வத் தேர் ஏறிச் சென்றவன் நான்
எத்தனையோ முறை உன்னிடம்
தோர்த்த பின்புதான் உணர்ந்தேன்
என் எண்ணம் தவறென்பதை
பலத்தால்
என்னிடும் நீ தோற்றுருக்கலாம்
உடலால்
உள்ளத்தால் உணர்வால்அன்பால் அரவணைப்பால் அழகால்
ஆத்ம ரீதியாக பலமுறை தோற்றுவிட்டேன்
உன்னிடம் நான்
நீ போகும் தேரில் என்னையும் ஏற்றிச் செல்
உன் தேரோட்டியாக நான் வாறேன்...
vendredi 24 janvier 2014
jeudi 23 janvier 2014
mercredi 22 janvier 2014
பசி வந்த போது பாலுக்கழுதேன்..
பிறந்த
போது ஏன் அழுதேன்
எனக்கே தெரியவில்லை
பசி வந்த
போது பாலுக்கழுதேன் அன்னை அரவணைத்தாள்
அன்பெனும் ஆளம் அறிந்தேன்
பள்ளிக் காலத்தில் துள்ளித் திரிந்தேன்
மான் குட்டியாய் கவலை அறியேன்
பருவ கால உச்ச நிலை உஷ்ணத்தில்
ஏன் அமர்ந்தேன் வேடம் தாங்கலில்
இன்று என் கையில் ஓர் குழந்தை
என், தந்தை பெயரை நான் அறிவேன்
என்
குழந்தையின் தந்தை யார் ..?
நான்
அறியேன் .. !ச்சீ.. இதுதானா காமத்தின் உச்ச நிலை
கண்ணியம் இழந்துவிட்டேன்
பெண்ணியமே என்னை
கல்லால் அடித்தே கொன்றுவிடுங்கள்..
mardi 21 janvier 2014
சுடர் தீபங்கள் கலைந்தாடுதே..
சூடான
ராத்திரிக்கு பூந்தோகை என்ன - பூ
மாலை
என்ன, திசை எங்கும் ஒரு ராகமே சுடர் தீபங்கள் கலைந்தாடுதே..
காட்டு
மல்லி பூவென்று தென்றல்
விட்டு
விட்டு போனதுண்டோகூடு விட்டு குயிலும் கூவ காலம்
கை சேர்ந்து கொள்வதெப்போ
சேர்த்தணைத்த துணையும் இல்லை
வேரை வீணறுத்தே போகுது
விதியின் எல்லை
பாசம் மோச வலை வீசிச் சாய்க்கிதே
மேகம் மேலிருந்து கண்ணீர் தூவுதே..
lundi 20 janvier 2014
samedi 18 janvier 2014
அன்பெனும் ஒளியே அணையா தீபம்..
கருவில்
உருவாகி உருவில் உயிராகி
உணர்வில்
உளம் நாடும் மனமேஅழகின் அரியணைகள்
விழியில் வீழ்ந்தாலும்
உனதல்ல உணர்வாய் நியமே
நோய் வந்து வீழ உதிரிகள் உருமாறும்
அழகும் அன்றே அழிந்தேகி கருகும்
உனை காண உன் கண்ணே
உளம் நொந்து கூசும்
அன்பெனும் ஒளியே அணையா தீபம்
முடம் என்று எவரையும் நீ
முன் மொழிந்து வாழாதே
உதிரிகள் நாளை
உன்னிடமும் குறையலாம்
உணர்வாய் நீ மனமே....
vendredi 17 janvier 2014
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்..
கை , இருப்பில் ஒன்றை வைத்து
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்பொய் உரைக்கவில்லை என் தோழி
போனவள் போனாளடி
மீண்டும் அவள் திரும்பவில்லை
என்னை நீ மன்னிப்பாயா..
என் நெஞ்சக் கூட்டுக்குள்ளும் – எண்
ணில் ஏழு காதலன் என் மன்னவா உன்னைத் தவிர
முதல் காதலை முகவுரையாகவும்
உன் காதலை முடிவுரையாகவும்
எனக்குள்ளே எழுதிவிட்டேன்
மெய் உரைத்த உன்னிடம்
பொய் உரைப்பேனா நானும்
மறப்போம் மன்னிப்போம் கிளிஞ்சல்களை..
jeudi 16 janvier 2014
mercredi 15 janvier 2014
கேணல் கிட்டு,வின் 21,வது ஆண்டு நினைவெழுச்சி நாள்...
16.01.1993,அன்று வங்கக் கடலில் வீரகாவியம் எழுதிய கேணல் கிட்டு உட்பட 10, மாவீரர்களின் ஞாபகார்த்த 21,வது ஆண்டு நினைவெழுச்சி நாள்...
கனா கண்ட காலங்கள் கரைந்தோடிச் செல்வதோ
கண்ணீரில் தமிழினம் காலத்தால் அழிவதோ
போராடி பெற்ற நிலம் பொல்லாங்கில் கிடப்பதோ
ஞானப் பழம் அல்ல நெல்லிக் கனியல்ல
இன்னொருவருக்கு தாரை வார்ப்பதற்கு
சுய,உரிமை வாழ்வின் தமிழீழக் கனி இது
இனச்சுத்தி செய்தோர் காலில் ஈழம்
ஈனம் உற்று அழிவதோ
நிலாச் சோறு உண்ட நிலம்
ஒளி இன்றி மாள்வதோ
உலகத் தமிழா உறங்காதே
உன் கையில் இன்று யுத்தம் நீ விடாதே
இனச் சுத்தி செய்தவன் இடி பாட்டில் அழிகிறான்
காலக் கூண்டில் நீதி தேவன் நெற்றிக் கண் திறக்கிறான்
நிச்சயம் தமிழீழம் நன்றே என்பான்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமே...
mardi 14 janvier 2014
தை பிறந்தது, தைத் திரு நாளென்று..
தை பிறந்தது, தைத் திரு நாளென்று
பொங்கலை பார்த்தது கிடையாது
எங்கள் உதய வானில்
திங்களை பார்த்ததும் கிடையாது
வாடகைச் சுவருக்குள்
அடுப்படிக் கல்லில்
ஆத்தா அவித்துக் கொடுத்தாள்
அச்சு வெல்லத்தோடு அரிசி
இதுதான் பொங்கலாம் !
தமிழர் திரு,நாளென தமிழர் கொண்டாடும்
போகிப் பொங்கல் இதுதான் என்றால்
தவறில்லைத்தான்..
இன்னும் என்ன இருக்கடா என் தமிழா
வாழாமல் நொந்து கெட்டும்
வாழ்த்துரைப்பதுதான்
எம் வாழ்வில் மிச்சமா ?
மெழுகி கோலம் இட முத்தமும் இல்லை
தழுவி பாய் விரிக்க தாய்நிலமும் இல்லை
வாகை சூடி வாஞ்சை கொண்ட
அந்தத் தமிழீழம் என்று மலருதோ
அன்றேதான் தமிழர் திருநாள் தமிழா
வாழ்த்துரைத்து பொங்கலாம்
வென்றே நீயும் வாடா..
பொங்கலை பார்த்தது கிடையாது
எங்கள் உதய வானில்
திங்களை பார்த்ததும் கிடையாது
வாடகைச் சுவருக்குள்
அடுப்படிக் கல்லில்
ஆத்தா அவித்துக் கொடுத்தாள்
அச்சு வெல்லத்தோடு அரிசி
இதுதான் பொங்கலாம் !
தமிழர் திரு,நாளென தமிழர் கொண்டாடும்
போகிப் பொங்கல் இதுதான் என்றால்
தவறில்லைத்தான்..
இன்னும் என்ன இருக்கடா என் தமிழா
வாழாமல் நொந்து கெட்டும்
வாழ்த்துரைப்பதுதான்
எம் வாழ்வில் மிச்சமா ?
மெழுகி கோலம் இட முத்தமும் இல்லை
தழுவி பாய் விரிக்க தாய்நிலமும் இல்லை
வாகை சூடி வாஞ்சை கொண்ட
அந்தத் தமிழீழம் என்று மலருதோ
அன்றேதான் தமிழர் திருநாள் தமிழா
வாழ்த்துரைத்து பொங்கலாம்
வென்றே நீயும் வாடா..
lundi 13 janvier 2014
பொங்கலுக்கு போனவளே போதுமடி உன் கோபம்..
இராத்திரிக்கு ஒரு பாட்டு - என்
ராசாத்தி உன்னை கேட்டு
போட்டாலும் போட்டேன்டி
ஒரு மில்லி ஊர் ஊத்து
ஆடாமல் ஆடிவிட்டேன்
யாரும் இல்லா உலகத்திலே
பூகம்பப் புயலாகி
பொங்கலுக்கு போனவளே
திங்கள் ஏழும் தீர்ந்ததடி
உன் கோபம்
தீரலையோ
அரசாங்க அனுமதியில்
அனு தினமும் விக்கிறாங்க
அந்த நாள் பொங்கலிலே
உன் அப்பனும் இப்டித்தான்
ஆறு வரிச தனி வாழ்வில்
ஆத்தாளும் தள்ளி வைத்தாள்
பொங்கலுக்கு போனவளே
போதுமடி உன் கோபம்
மாதுனை பிரியேன்டி
என் மனையாளே வந்துவிடு
நான், மது விலக்கு செய்துவிட்டேன்...
Inscription à :
Articles (Atom)
எவர்கிறீன் !!! அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...
-
பெற்றவள் உனக்கழித்த பெறு பேற்றில் சுற்றம் சூழ வாழ்ந் துயர்ந்து சுறண்டலிலே தேய்ந்து கெட்டு செத்துவிடும் மானிடா உன் பிறப்பு முதல் உயரிய உயி...
-
காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்றே வளக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா...
-
கண்ணுக்குட்டி என்னை தண்ணீர் தந்து வளர்த்தவன் நீதான் நிழல் தந்து நின்ற என்னை நீயே வெட்டிவிட்டு விறகென்றாய் கலங்கினேன் ..! இருந்து...