புதன், 18 ஜூன், 2014

நிழல் கூட்டுப் பறவைதான் நான் ..

நிழல் கூட்டுப் பறவைதான் நான்
சகோதரச் சரத்திற்குள் தன் நிறைவுற்றது
என் பிறப்பு ...
முளைத்த சிறகை விரிச்சுப் பறந்தேன்
திசை மாறவில்லை ...
அன்னை தந்த அன்பையும்
தந்தை தந்த நிழலையும்
உறவெனும் மாளிகைக்கு  
அத்திவாரம் இட்டேன்
பாசம் எனும் நூல் வேலியே
எனது அணிகலன் ...
இறக்கை விரித்த என் குஞ்சுகளும்
இல்லாத ஊருக்கு போகவில்லை
என் முகம் பார்த்து ,
புன்னகைத்துச் செல்கின்றன ...
இதயம் கனிந்து இளைப்பாறுகின்றேன்...

வாசலிலே அழைப்பொலி !!!

முகில் திரையாலே முத்தம் இட்டாள் நீலச்சேலை கட்ட மறந்த மங்கை வெட்கம் அறியா ஏரிக்கரை கிளிகள் ஆடை கட்டின  ! வாசலிலே அழைப்பொலி கேட்ட...