mardi 31 décembre 2013
lundi 30 décembre 2013
dimanche 29 décembre 2013
samedi 28 décembre 2013
இரவுக்கு விடுதலை..
இரவுக்கு விடுதலை கொடுக்க உன்னால் முடியுமா
அந்த பௌர்ணமி ஓன்றுதான் கொடுக்கிறதுமாதத்தில் ஓர் நாள், இரவுக்கு விடுதலை
குளிரூட்டப் பட்ட உலகப் பெருந் திரை அரங்கில்
அன்றுதான் கட்டணம் இன்றி
பற்றுச் சீட்டு இன்றி
அனைவரும் படம் பார்க்கிறார்கள்
அரங்கம் நிறைந்த ரசிகர்கள் இருந்தாலும்
கௌவுஸ்,புல் என்று யாரும்
அறிவித்தல் இடுவதில்லை.
lundi 23 décembre 2013
உன்னை நான் வாசித்தேன்....
என்னை நீ நேசிக்கும்போது
உன்னை நான் வாசித்தேன்எனக்காக உன் மனசை
முழுதாய் நீ கொடுக்கவில்லை
அம்மா,அப்பா என்றாய்
அக மகிழ்ந்தேன்
அண்ணா,அக்கா,தம்பி,தங்கையென்றாய்
மகிழ்ச்சிக் கடலில் இமைச் சிறகை
மெல்ல விரித்தேன்
அன்பே ஆரூயிரே என்றாய்
அங்கே நான் வீழ்ந்துவிட்டேன்
எனக்காகவும் ஓர்ரிடம்
என்னை உன்னுயிராய் கணித்திருந்தாய்
இனிய காதல் என்பது இதுதானே என் காதலா
உயிர் தந்த அன்னை முதற்கொண்டு
உயிராக என்னை நேசிக்கும் உன்னோடு
காலம் எல்லாம் வாழ காத்திருக்கிறேன்
எங்களின் கல்யாண நாள் எப்போது சொல்லடா
dimanche 22 décembre 2013
samedi 21 décembre 2013
vendredi 20 décembre 2013
jeudi 19 décembre 2013
mercredi 18 décembre 2013
mardi 17 décembre 2013
தேசக் குரலோன்..
பேரினச் சிங்களம் தமிழர் மேல் அள்ளி இட்ட
தீ..
பூவென்றும் பிஞ்சென்றும்
கிளம் என்றும் பாராமல்
அள்ளி உண்ணும் போதில்
விதியென வீழாது
வெகுண்டெழுந்த
வீர வேங்கையே...
எம்மின வாழ்வியலின்
ஏடேந்தி
இறையாண்மைக்கு உயிரூட்டி
விடிவான கதிர் ஏற்றி
திம்பு முதல் ஜெனிவா
வரை
ஐ,நா மன்றுக்குள்ளும்
அடங்கா பற்றொடு
அறம் எழுதி
வாதிட்ட தத்துவ
ஞானியே
தேசியத் தலைவனின்
அவைப் புலவன் நீ
தம்பியிடம் கேட்டேன்
ஆயுதம் தாரும் என்று
தர மறுத்துவிட்டார்
நான் மந்திரி என்று
புன்னகையாய் சொன்னீர்
அண்ணா
மென் மலர் தூவி
நின்றீர் அண்ணா
தேசக் குரலோனே உமது
ஆழுமை சொற் புதிர்கள்
இன்றும் அகிலத்தை
ஆட்டிவைத்துப் பார்க்குதண்ணா..
vendredi 13 décembre 2013
சினம் தணிந்து மனம் கனிவீர்..
பிளைக்க வந்தேன் வெளி
நாட்டில்
ஈராண்டு களிந்தது நூறாண்டு
போல்பணம் பத்தும் செய்யும் என்பார்
குணம் தானே இங்கே
குட்டையில் மட்டையானது
வீடு நோக்கி ஓடிவந்து
பிணக் காட்டில் துடிக்கிறேன்
பிளைப்புத் தேடி போனவரே
சினம் தணிந்து மனம் கனிவீர்
ஆற்றி வைத்தேன் ஆனவரை
என் உடல் பசியோ ஆறவில்லை
கள்ளிக் காட்டு காற்றலையில்
இழந்து விட்டேன் என்னை நான்
தன்னை, மன்னித்து விடு என்றாள் இவள்.
mercredi 11 décembre 2013
நான் அழைத்தால் வருவாள் என் அம்மா..
கருவறைக்
காலக் கார் மேகம் - மீண்டும்
வராதா என
இறைவனை கேட்டேன்ஒரு முறைதானே
அந்த அரு மறை வரம் என்றே
இறைவனும் சொல்லிவிட்டான்
இடரில் அழுதேன் துயரில் அழுதேன்
நீ வரவில்லையே இறைவா..
என் விழி நீர் துடைத்து
என்னை ஆட்கொள்ள
அவள்தானே வந்தாள்
எனக்குத் தெரியும்
இது உனக்குப் புரியாது
இறைவா நீ அன்னை இல்லாதவன்
அம்மா.. அம்மா... அழைக்கிறேன்
உன் பிள்ளை, வந்துவிடு...
mardi 10 décembre 2013
கவிச்சாரதிக்கு, இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்...
பாரதி கவிச்சாரதி
எண்ணம் எனும் தேரில் – வண்
ணம் மாறா வாழ்வில் நீ வாழ்கிறாய்
கவியே நீ வாழ்கிறாய்
காடு மலை மேட்டிலும்
சொட்டு மலர் தேனிலும்
நீ வாழ்கிறாய்
கவியே நீ வாழ்கிறாய்
கொஞ்சுங் கிளியாள் கூண்டுக்குள்ளே
பஞ்ச வர்ணம் கலையக் கண்டு நெஞ்சத் தீ நெடுவளர்த்து
மஞ்சத்திரை மாற்றியவா
வேல் விழியில் தீ வளர்த்து
தீயவரை தான் அழித்து
உன் இறப்பை மீட்டெடுத்து
தசையினை தீ சுடினும் சுடட்டும் என்றே
தமிழீழத் தங்கையர்
ஈழத்திலே மீண்டும் உன்னை பிரசவித்தார்
விஜையனுக்கு பார்த்தன் போல்
பாமரர்க்கு சாரதி நீ.. பாப்பா பாட்டின்
பாரதி நீ..
புவி ஈர்ந்த கவியே புயல் சாயா மதியே
கள்ளிருக்கும் பூவிலும் உள்ளிருக்கும்
தேனிலும்
உனை காண்கிறேன் நான் உனை காண்கிறேன்.
(எட்டையபுரத்தில்
1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி சின்னச்சாமி
அய்யருக்கும் லெட்சுமி அம்மாளுக்கும் பிறந்த குழந்தைதான் நமது சுப்ரமணிய
பாரதியார்.)
நான் உருகும் மெழுகு பொம்மையே...
இனிமையின் நினைவிலும் இளமையின்
ஒளியிலும்
என் உள்ளம் வருடும் பெண்மையே நான் உருகும் மெழுகு பொம்மையே
ஒரு பக்க பூவிலும்
மறு பக்க தலையிலும்
வாழ்க்கை நாணயமா
உன் பூமுக சிரிப்பும்
கருகிடும் திரியில்
உருகிடும் நாடகமா
உருகுது மனமும் உளறுது நினைவும்
உன் நினைவலை எடுத்தே போகின்றேன்
மறுமுறை ஒரு முறை கருவறை ஒன்று
என் திருமுகம் தந்தால்
மறு ஜென்ம மலரே காத்திரு
வாழ்வினில் கொடியது நோய் என தெரிந்தும்
வரம் வாங்கி நான் வந்து பிறப்பேன்..
lundi 9 décembre 2013
மலரின் மரணம்..
மலரே நீ அழகே அழகு..
மொட்டாக இருக்கயில்உன் பட்டு இதழ்களை
தொட்டதில்லை சூரியனும்
சிட்டுக்களின் மகுடி கேட்டு
மொட்டு இதழை ஏன் விரித்தாய்பட்டுக் குஞ்சம் நடுவே
நீ, சொட்டுத் தேன் கொடுத்தாலும்
சிட்டுக்கள் உன் இதழ்கள் மேல்
வைத்துப் போவது ரணங்களின் வடுவே
அழகெல்லாம் உன்னிடம் கொடுத்தவன்
உன் ஆயுளை ஏன் சுருங்கக் கொடுத்தான்நீ, துயரக் கடலில் மூழ்குவதை கண்டுதானோ...
dimanche 8 décembre 2013
samedi 7 décembre 2013
vendredi 6 décembre 2013
jeudi 5 décembre 2013
mercredi 4 décembre 2013
Inscription à :
Articles (Atom)
எவர்கிறீன் !!! அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...
-
பெற்றவள் உனக்கழித்த பெறு பேற்றில் சுற்றம் சூழ வாழ்ந் துயர்ந்து சுறண்டலிலே தேய்ந்து கெட்டு செத்துவிடும் மானிடா உன் பிறப்பு முதல் உயரிய உயி...
-
காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்றே வளக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா...
-
கண்ணுக்குட்டி என்னை தண்ணீர் தந்து வளர்த்தவன் நீதான் நிழல் தந்து நின்ற என்னை நீயே வெட்டிவிட்டு விறகென்றாய் கலங்கினேன் ..! இருந்து...