ஞாயிறு, 16 மார்ச், 2014

இனக்காற்றில் சாய்ந்த மரங்கள்...


வனக்காட்டில் தினம் ஓடுகின்றன என்
மனக் குதிரை, வயசாகிப் போனதால்
வேகம் இழந்து தளர்ந்து விட்டன
என்னிரு கால்கள்...
இருந்தும் தினைப் புனம் காணவேண்டும்
என்கிறது விழி மடல்கள்
வீரியம் இழந்ததால் தூரம் அதிகம் என்று
விரித்த சிறகை மடித்து அமர்ந்திட
தேடுகிறேன் ஒரு கிளை       
இனக்காற்றில் சாய்ந்த மரங்கள்
நீறாகிக் கிடக்கின்றன
இருந்தும் அதன் வேர்கள் மண்ணுக்கடியில்
விதைத்தவன் விழி மூடினாலும்
மீண்டும் முளைக்கலாம் இந்த மரங்கள்
காத்திருக்கிறேன், அந்த ஒரு கொடி நிழலுக்காக
என் உசிர் உள்ளவரை...

சயன மாளிகை !!!

அழகே உன்னை எழுதும் மனசை விழிகளின் இறகுகள் வென்றதடி அன்பு முத்திரை பதித்திட பதித்திட எழுதும் கோல் உன் அன்பை எழுத வெள்ளை தாளில் ...