வெள்ளி, 26 செப்டம்பர், 2014

மணித் துளிகள் எண்ணப்படுகின்றன ...


மணித் துளிகள் எண்ணப்படுகின்றன
தினம், பிறந்து இறக்கும் நாட்களுக்காக
தன் ஊனினை உருக்கி
உயிரினை நெய்யாக்கி
அகிம்சைப் போரில்  நீராகாரமும் இன்றி
எண்ணிக் கொண்டான் மணித் துளிகளை
பன்னிரு நாட்கள் தியாக தீபம் திலீபன்..
 
அகிம்சையின் தந்தை காந்தி என்றால்
அவனின் தந்தை இவனாவான் 
அகிம்சைப் பிளம்பின்
அடியும் முடியும் இவனே..
சுய உரிமை தன்னாட்சி சுதந்திரம் தரவல்ல
தமிழீழமே தமிழரின் தாயகம் என்றான்
அமைதிப் படையென வந்த இந்திய அரசின்
வல்லாதிக்க முக மூடி கிழித்து சிதைத்தான்
 
இன்றுள்ளேன் நாளையும் இருப்பேன் என  
நல்லூரான் வீதியிலே நல்லுரை தந்தவன்
அறவளி நின்று அனலையும் தின்றவன்
என் தாய் எனக்கீர்ந்த
இன்னுயிரை தந்துவிட்டேன்
வெடிக்கும் மக்கள் புரட்சியில்
நாளை பிறக்கும் தமிழீழம் என்றே
இறவா வரத்தில் நீக்கமற நிறைந்து
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமே என்றான்....
 
Kavignar Valvai Suyen

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்