ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

விலாசம் அற்ற மந்தையாய் வீதியில் மனிதன்..

விலாசம் அற்ற மந்தையாய் வீதியில் மனிதன்
அச்சடித்த வாக்குச் சீட்டில் அழ கழகாய்
அவனின் பெயர்..
வறுமைக் கோட்டின் வரிகளை
படம் பிடித்து காட்டிக் கொண்டிருக்கிறது
கடந்த தேர்தலில் கிடைத்த புத்தாடை
அவன் மேனியை கந்தல் கந்தலாய்..
 
அரசுடமை களவாணிகள் கட்சிக் கொடியுடன்
ஐந்தாண்டுக் கொருமுறை வேட்டித்  துண்டுடன்
குசேலரின் வாக்குச் சீட்டில்
கறுப்புப் பண குபேரர்கள் நாற்காலியில்..
அங்கம் எங்கும் தங்க நகை
அது உறங்க பணக்கத்தை மெத்தை
வீதி வாசி ஓலைப் பாயும் இன்றி இருட்டில் .. ..
 
Kavignar Valvai Suyen
 

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்