புதன், 26 நவம்பர், 2014

ஒளிக்கு உயிர் நீ.. மொழிக்கு விடியல் நீ..


ஒளிக்கு உயிர் நீ.. மொழிக்கு விடியல் நீ..
உன் ஒளிமுகம் காணா விழிகள்
நிற் கதி இன்றி, தனி இனி
இமைகள் ஒரு கணம்
மூடித் திறப்பதற்குள்
விழிகளை களவு செய்கிறார்
தாய் நிலத் திருடர்கள்..
ஈழக்கதிரோனே
கிழக்கில் உதயமும்
வடக்கில் வசந்தமும்
சுறண்டலின் தலமையாகிவிட்டன
ஒளிக்கு உயிர் நீ மொழிக்கு விடியல் நீ
உன் ஒளிமுகம் காணும் நாள் என் நாளோ...
 
Kavignar Valvai Suyen

செல்லரித்த வாழ்வு !!

  மன்றேறி ஜீவனாம்சம் கொடுத்தாலும் கரம் விட்டகலா காதலி செல் போன் செல்லரித்த வாழ்வெனினும் உதட்டோடு உதட்டு முத்தம் இல்லையேல் நித...