lundi 10 novembre 2014

வேடம் தாங்கலிலும் விடிவற்ற வாழ்வே...


காலைப் புலர் வெழுந்து  - கண்
களை வாசிக்கும் முன்னே
அலாரம் அடித் தெழுப்புகிறது அனு தினம்
துடிக்கும் இதையங்களை  தூக்கில் இடவே
 
களத்தை மறந்தோரும் களத்தில்தான் இங்கே
கழுத்துச் சுருக்குகள் கனவின்றி எதிரே
வைர நகை வளையல்கள்
அங்கம் தனில் மிழிர்ந்தாலும்
ஓலைப் பாயில் படுத்துறங்கிய
அந்த நாட்களைப் போல் நெஞ்சம் மிளிரவில்லை
வேடம் தாங்கலிலும் விடிவற்ற வாழ்வே...
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...