jeudi 13 novembre 2014

காதல்..


காதல்..
மனதாழம் கொண்டதடி உன் மீது
நான் கொண்ட காதல்
நீ கொண்ட காதல் கடல் ஆழம் என்றால்
முத்தெடுக்க அங்கும் வருவேன் நான்
காலைப் பொழுதின் ஈர முற்றத்தில் தானடி
நான் போட்டேன் காதல் கோலம்
பிறருக்கு இது மாக்கோலமாய் தோன்றலாம்
உனக்குமா இது உச்சி வெயில் கோலம்
நண்டாக நான் போட்ட கோலங்களை
ஆழி அலையாய் அளித்துப் போய்விட்டாய் நீ
 
Kavignar Valvai Suyen

4 commentaires:

  1. ''.. கொண்ட காதல் கடல் ஆழம் என்றால்
    முத்தெடுக்க அங்கும் வருவேன் நான்..'' ha..ha!...
    மனதாழம்
    கொண்ட காதல் ....good....
    Vetha.Langathilakam

    RépondreSupprimer
    Réponses
    1. சகோதரி வேதா... என் வெப்சைற்றில் என் கவிக்காக நான் வாசித்த முதல் கருத்து ரெண்டெழுத்து "ha..ha முத்தெடுத்தேன் உங்கள் அன்பை கண்டு மகிழ்ச்சி மனதாழம் தொட்டு தந்தேன் Good டோடு சேர்ந்த Good Nid

      Supprimer
  2. காதலுக்கு கவி மழை பொழிய வைக்கும் சக்தி உண்டு. அதை கவிதையில் உணர்ந்தேன். நன்று

    RépondreSupprimer
    Réponses
    1. மூங்கில் காற்றே - கதலே கவிதையானதெனக் கண்டு நல்மனம் உகந்தீர் நன்று. தோழர் முரளிக்கு என்மனச் சான்று உன் நல் மனம் கண்டு..

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...