samedi 29 novembre 2014
வசீகரம் கொள்கிறாய் மனிதா என்னில் நீ ..
அருவி.. ..
உருவம் அற்ற மிகையில் மலையிருந்து வீழ்கிறேன் வசீகரம் கொள்கிறாய் மனிதா என்னில் நீ
மூலிகையும் தேனீகமும் தேடி வருகிறேன்
உன் ஜீவனின் மருந்தகம் என்னில் சுமக்கிறேன்
தழுவிக்கொள் என்னுயிரே என்னை உன் காதலியாய்
தடாச் சட்டம் ஏதும் இல்லை
உன்னை தடுத்தாட்கொள்ளமாட்டேன், ஆனாலும்
உன் ஜீவனாய் எண்ணிவிடாதே என்னை, என
வளைந்தோடி விலகிச் செல்கிறது, அருவி ...
Kavignar Valvai Suyen
jeudi 27 novembre 2014
mercredi 26 novembre 2014
ஒளிக்கு உயிர் நீ.. மொழிக்கு விடியல் நீ..
ஒளிக்கு உயிர் நீ.. மொழிக்கு விடியல் நீ..
உன் ஒளிமுகம் காணா விழிகள்நிற் கதி இன்றி, தனி இனி
இமைகள் ஒரு கணம்
மூடித் திறப்பதற்குள்
விழிகளை களவு செய்கிறார்
தாய் நிலத் திருடர்கள்..
ஈழக்கதிரோனே
கிழக்கில் உதயமும்
வடக்கில் வசந்தமும்
சுறண்டலின் தலமையாகிவிட்டன
ஒளிக்கு உயிர் நீ மொழிக்கு விடியல் நீ
உன் ஒளிமுகம் காணும் நாள் என் நாளோ...
Kavignar Valvai Suyen
mardi 25 novembre 2014
தானைத் தலைவன் உனக்குள்ளே..
நெஞ்சே நெஞ்சே அஞ்சாதே
தானைத் தலைவன் உனக்குள்ளேபாசத் தமிழா உறங்காதே
வீரத் தலைவன் பிரபாகரனே
ஆற்றுப்படை நின்றே அழுத விழி துடைத்தான்
கொடிய பகை எரித்தே உன் முகம் காத்தான்
வருவான் வடிவேலன் என கணமும் நில்லாதே
செய்யடா தம்பி செய் செய் தலைவன் சொன்னதை
தமிழீழம் தான்டா தமிழா, தரணியில் உன் கொடை...
Kavignar Valvai Suyen
ஒவ்வொரு விடியலும் விடியும்வேளை..
இறவாமல் பிறவாமல் எமை ஆழும் தலைவா
இன்றுமது அகவை அறுபது ஆதவனே வாழ்க
ஒவ்வொரு விடியலும் விடியும்வேளை
ஒவ்வொரு இரவுகள் இறக்கின்றதே
ஒவ்வொரு விடியலும் உறங்கிவிட்டால்
ஒவ்வொரு இரவும் தின்கிறதே.. ..
இருப்பது சில நாள் இறப்பது ஒரு நாள்
உயிரும் அதற்கே போராடு
உரிமை வெல்வோம் உலகம் வியக்கும்
உன் நிலை உயரும் வழி தேடு
வாழ்வுக்காகப் போராட்டம்
வானகம் மீதிலும் நடக்கிதடா
வாழ்வோ சாவோ வென்றால்த்தானே
தலை முறை வாழ்ந்து சிறக்குமடா
தமிழா தமிழா ஒன்றுபடு
தமிழீழத் தாயகம் தாகமடா...
Kavignar Valvai Suyen
மாலை...
மாலை...
வாசம் மிகு பூப்பறித்து வண்ண வண்ண மாலை கட்டி கூந்தலிலே சூடியதொரு காலம், மகளே விழிகளிலே ஏன் இன்று வீரக் கனல் கோலம்
காய்ந்த நெஞ்சில் ஈரம் இல்லை காயம் பட்ட உடல் ஆறவில்லை கானலிலே கரைந்ததேன் சுதந்திரம், அன்னையே நான் தேடுகிறேன் தென்றல் தொடும் காலம்
நெற்றியிலே பொட்டெங்கே நீண்ட சடை பின்னல் எங்கே பூமாலை சூட மறந்தாய் இக்காலம், மகளே எங்கே போகிறாய் ஏன் இந்தக்கோலம்
காதலென்றும் மோகமென்றும் காயம் செய்யும் விழி புனைந்து புத்திகெட்டு போனதொருகாலம், தாயே போகட்டும் இது இரெத்தம் சிந்தி போரிடும் நேரம்
பட்டுச் சேலை பொட்டும் பூவும் தங்கமாலை தாலிச்சறடும் உன் கழுத்தை ஆழவேண்டும் மகளே என்னைவிட்டு ஏன் நீ செல்லவேண்டும்
நஞ்சுமாலை அணிந்தேனம்மா நாடு மீட்க போகிறேன் நான், உன்னை விட்டுச் செல்லவில்லை இமை கண்ணை விட்டகலுமோ சொல் தாயே
முல்லை மலரென்றே உன் முகம் பாத்திருந்தேன் ஐயன் நிழலும் இன்றி வாடி வீழ்ந்துவிட்டேன் மணமால காயும் முன்பே மலர்வளையம் வைத்தேன் மகளே, இனவாதத் தீயிலே இரையானார் தந்தையன்றே உன் துணை வேண்டும் எனக்கு இருப்பாயா என் மகளே
ஓயாத அலைபாயும் ஈழத்தாய் நாடம்மா கரிகாலன் படையிருக்க கலக்கம் ஏனம்மா உனைக் காண நான் வருவேன், என் பிஞ்சுமகன் விளையாட தமிழீழம் மீட்டுட போறேன்
போகாதே என்று சொல்ல போராடுது நெஞ்சம் மகளே, ஊரோடு சேர்ந்துண்டு உறங்கும் நாள் வரும் என்று உறங்காமல் விழித்திருப்பேன் உன் பாதம் காணும்வரை
படை கண்டு அஞ்சவில்லை காலனிடம் கலக்கம் இல்லை விடைகொடு தாயே விடியும்வேளை வீடு நான் திரும்புவேன்
விடுதலை பறவையே விலங்குடைத்து விரைந்துவா பூமாலை கட்டிவைப்பேன் பூமகளே புயல் கண்டு இனி அஞ்சேன் நான்...
Kavignar Valvai Suyen
18.05.2000,த்தில் மாலை, எனும் தலைப்பில் பெண் புலிகளை நினைந்தெழுதி I B C , வானலைகளில் வலம் வந்து மனமுருகி வயல் வெளியில் எனும் என் கன்னிக்கவிதை நூலிலும் இருக்கின்றது இக்கவிதை. தாயோடும் சேயோடும் மாசுபடா மலரெடுத்து நான் தொடுத்த மாலை இது சூடிகொள்ளுங்கள் பெண் புலி தங்கைகளே..

தலைவா தலைவா தமிழரின் தேசியத்தலைவா..
உலகம் வியக்க நிமிர்ந்தாய் நிமிர்ந்தாய்
உன்னால் உலகில் உயர்ந்தோம் நாமே
உலகே அறியும் உன்னை உன்னை
எங்களின் தலைவன் பிரபாகரனே
உரிமை வேண்டும் தமிழர்க்கு
உரக்கச் சொன்னாய் தலைவா
வீரத் தலைவா விடியல் கதிரே
கொள்கை கொடையே கருணை கடலே
அகவை வந்ததுனக்கு அறுபது
வாழிய தலைவா நீ பல்லாண்டு
இவ்வையகம் காணும் தேனாறு...
Kavignar Valvai Suyen
lundi 24 novembre 2014
இதய ஒலி கேக்கிறதா..
இதய ஒலி கேக்கிறதா..
ஒளி ஏந்தி வந்துள்ளீர்கள் எமதுறவே
விழி நீர் சிந்தாதீர்கள் விடியலுக்காகாது
பாச நேசங்களை பற்றறுத்து
பாதியில் போகவில்லை நாங்கள்
உமக்காகவே போராடினோம்
உதிரம் சிந்தினோம்
உயிரையும் தந்துவிட்டோம்
உளமாற மகிழ்கின்றோம் உங்களை பிரியவில்லை
இன்னும் விடியவில்லை இடர் காட்டில் நீங்கள்
முள்ளி வாய்க்கால் முற்றுப் புள்ளி அல்ல
விடியல் வென்றால் வந்தெமை எழுப்புங்கள்
நாம் நித்திரை அல்ல
தாய் மடியில் கொஞ்சம் இளைப்பாறுகின்றோம்
தாலாட்டுகிறாள் எங்களை தமிழீழத் தாய்..
Kavignar Valvai Suyen
dimanche 23 novembre 2014
தானைத் தலைவன் உனக்குள்ளே..
நெஞ்சே நெஞ்சே அஞ்சாதே
தானைத் தலைவன் உனக்குள்ளேபாசத் தமிழா உறங்காதே
வீரத் தலைவன் பிரபாகரனே
ஆற்றுப்படை நின்றே அழுத விழி துடைத்தான்
கொடிய பகை எரித்தே உன் முகம் காத்தான்
வருவான் வடிவேலன் என கணமும் நில்லாதே
செய்யடா தம்பி செய் செய் தலைவன் சொன்னதை
தமிழீழம் தான்டா தமிழா, தரணியில் உன் கொடை...
Kavignar Valvai Suyen
என் மண்ணுக்குத் தனி வாசம்.. ..
என் மண்ணுக்குத் தனி வாசம்.. ..
ஊருக்கு ஒரு வாசம் என் மண்ணுக்குத் தனி வாசம்
மாவீரர் முகம் தோணுதே தமிழாலே காந்தழ்
கதிர்ச் சோலை பூத் தூவுதே.. ..
புயல் எழுமோ இன்னும் இடி விழுமோ
இதயத்தை இடம் நீக்கி இனி ஒரு விதி தருமோ
வீரம் விதையானதே விடிவிற்கே உயிரானதே
உனக்குள்ளே வாழுது தமிழா
உன் சோதரர் உயிரே அது
உரம் இட்டு நீர் ஊற்று
உன் தாயகம் உனக்கே அது
மாவீரர் முகம் தோணுதே தமிழாலே காந்தழ்
கதிர்ச் சோலை பூத் தூவுதே.. ..
கவி எழுதி சுரம் மீட்டு புவி மீட்க களம் பொருது
வங்கத்திலும் வெடியானதே வேங்கை
வெண்சங்காய் தினம் வாழுதே
ஊரெல்லாம் ஒரே வாசம் தமிழீழப் பூ வாசம்
காந்தழ் உலகெங்கும் உயிரானதே
தயங்காதே தமிழா தமிழீழம் உனதாகிதே
காந்தழ் கதிர்ச் சோலை பூத் தூவுதே..
Kavignar Valvai Suyen
samedi 22 novembre 2014
ஒவ்வொரு விடியலும் விடியும்வேளை ..
ஒவ்வொரு விடியலும் விடியும்வேளை
ஒவ்வொரு இரவுகள் இறக்கின்றதேஒவ்வொரு விடியலும் உறங்கிவிட்டால்
ஒவ்வொரு இரவும் தின்கிறதே.. ..
இருப்பது சில நாள் இறப்பது ஒரு நாள்
உயிரும் அதற்கே போராடு
உரிமை வெல்வோம் உலகம் வியக்கும்
உன் நிலை உயரும் வழி தேடு
வாழ்வுக்காகப் போராட்டம்
வானகம் மீதிலும் நடக்கிதடா
வாழ்வோ சாவோ வென்றால்த்தானே
தலை முறை வாழ்ந்து சிறக்குமடா
தமிழா தமிழா ஒன்றுபடு
தமிழீழத் தாயகம் தாகமடா...
Kavignar Valvai Suyen
Inscription à :
Articles (Atom)
எவர்கிறீன் !!! அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...
-
பெற்றவள் உனக்கழித்த பெறு பேற்றில் சுற்றம் சூழ வாழ்ந் துயர்ந்து சுறண்டலிலே தேய்ந்து கெட்டு செத்துவிடும் மானிடா உன் பிறப்பு முதல் உயரிய உயி...
-
காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்றே வளக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா...
-
கண்ணுக்குட்டி என்னை தண்ணீர் தந்து வளர்த்தவன் நீதான் நிழல் தந்து நின்ற என்னை நீயே வெட்டிவிட்டு விறகென்றாய் கலங்கினேன் ..! இருந்து...