vendredi 31 octobre 2014
jeudi 30 octobre 2014
mercredi 29 octobre 2014
அன்னை அபிராமியின் திருப் பாதம்..
அமைதி இல்லா இராப் பொழுதுகளில்
பூத்திரி மௌனிக்க வலுவில்லா
இராத்திரிகள்நெஞ்சை வஞ்சித்தன..
பூடை நீக்கி தேறுதல் கொண்டு
மாறுதல் பெற்றேன்
அமைதிப் பூவனத்தில் அற நெறி காத்து
ஆறுதல் கொண்டது மனசு
பிரபஞ்சமே இடிந்து பூமியில் வீழ்ந்தாலும்
அஞ்சேன் இனி அறிந்தேன்
அன்னை அபிராமியின் திருப் பாதம்..
Kavignar Valvai Suyen
mardi 28 octobre 2014
lundi 27 octobre 2014
dimanche 26 octobre 2014
எழில் கொண்ட இயற்கையாளே ..
எழில் கொண்ட
இயற்கையாளே என் வாசல் வந்தவளே
வண்ண வண்ணச் சட்டை
போட்டு உன் அழகை மெருகூட்டிவிட்டான் வர்ண பகவான்
ஊட்ட ஒளியை உனக்கு ஊட்டி பிள்ளைக் கனியாய்
உன்னை தத் தெடுத்து தாலாட்டுகிறான் ஆதிசேசன்
கை வீசு அழகே கை வீசென
தென்றலாய் உன்னைத் தழுவி
காதலிக்கிறான் வாயு தேவன்
வாழ்க மகளே வாழ்க வென
விண்ணவரும் உனை வாழ்த்த
மண்ணில் இந்த மனிதன் ஏனோ
நன்றி மறந்தான் !
நிழல் கொடை நீ கொடுத்தும்
உன் உடல் அறுத்து உயிர் போக்கி
பிணமாய் எரிகிறான் விறகில்
எல்லை இல்லா எழில் இளவரசியே
உலகெங்கும் உன தாட்சியே
நீ இல்லையேல் உயிர் இல்லையே..
Kavignar Valvai Suyen
samedi 25 octobre 2014
வேலைக்காறி ..
எனக்கொரு பெயர் இருந்தும் என் பெயர் வேலைக்காறி
வேடம் தாங்கல் இல்லை கூலிக்காக
மாரடிக்கிறேன் உலை அடுப்பு எரியுமா எரியாதா என
காத்திருக்கிறது அடுப்படியில் கலயங்கள்
பட்டுணியில் அழுகிறார் பாலகர்கள்
பசி அறியா குடிகார ஊதாரி என் புரிசன்
சேலை முடிச்சவிழ்க்கும் வரைதான்
நான் அவனின் பத்தினி
தினம் போதை ஏற்றி வீடு வந்து
என்னை தீக்குளிக்கச் சொல்கிறான்
சந்தேகப் பிராணி!
கூரையின் ஊடே வானத்து நட்சத்திரங்களும்
எட்டிப் பார்க்கின்றன
இவன் ராமனா குசேலனா என்று ...
Kavignar Valvai Suyen
vendredi 24 octobre 2014
உயரப் பறக்க இறக்கை இருந்தும் ..
உயரப் பறக்க இறக்கை
இருந்தும்
மூக்கணாங் கயிற்றில்
வாழ்க்கைஏறப் படிகள் எத்தனையோ தெரிகிறது
படி தாண்டினால் பத்தினி அல்ல
தூசிக்கும் வார்த்தை, வேசி
கை கால் இயலாதவன்
கட்டிவைக்கிறான் தொழுவத்தில்
சுற்றிச் சுற்றி வருகிறோம்
வட்டம் இட்ட காலடியில், பள்ளத்தாக்கு
எங்கள் வண்ணச் சிறகை ரசிப்பவனே
எண்ணச் சிறகை வெட்டுகிறான்
விண்ணையும் தொட எம்மால் முடியும்
அவிழ்த்து விடுங்கள் தொழுவக் கயிறை
வாங்கித் தருகிறோம் சுதந்திரம் ..
Kavignar Valvai Suyen
மண் சட்டி சோற்றுக்கும் மீன் கறி குளம்புக்கும்..
மண் சட்டி
சோற்றுக்கும்
மீன் கறி
குளம்புக்கும்அன்றொரு வாசம்
என் மன்னவன் மகிழ்ந்து
புன்னகை பூத்திட
நடு நிசியும் தோக்கும்
இன்றைய வாழ்வுக்கும்
இல்லற ஜோதிக்கும்
இரும்பறைக் காலம்
இதில் பந்தமும் பாசமும்
பாஸ்பூட் பரிமாறி பறக்கின்ற காலம்
நடு நிசி ஏதென்றும் நண்பகல் ஏதென்றும்
யாருக்கும் தெரியவில்லை
எதிர் காலக் கனவை தண்ணீரில் எழுதியே
எல்லோரும் எங்கோ போகின்றோம்..
Kavignar Valvai Suyen
jeudi 23 octobre 2014
சோதிடக் கிளியே சொல்லு சொல்லு ..
சோதனைக் காலம் என்று தீருமோ
ஏடெடுத்து கொடு ..
கூண்டுக் கிளியின் ஏடெடுப்பில்
ஏழ்மை மாறும் என எப்படி நம்புகிறாய்
சிறகறுத்த கிளியை கூண்டில் இட்டு
சோம்பேறி சொல்லும் தீமை இது
விடிவில்லா இவரிடமே
விளக்கொளி தேடுகிறாய்
உயர்வுக்கு ஒளி இவரிடம் உண்டென்றால்
என்றோ இவரே உயர்ந்திருப்பார் ..
Kavignar Valvai Suyen
mercredi 22 octobre 2014
mardi 21 octobre 2014
வாழ்க்கை பாடத்தின் முகப்பு அட்டையில் ..
வாழ்க்கை பாடத்தின்
முகப்பு அட்டையில்
முகங்கள் மாறுவதுண்டு
வடுக்களின் வலிகள் மாறுவதில்லை ..
பறவைகளின் இறகை பறிப்பதை தவிர்த்து
நிழல் தர ஒரு மரமேனும் நிலத்தில் நீ வை
இயற்கையும் உன் தோழியாகும் ..
நினைவில் கொண்டதை நிலையாய் வைத்துவிடு
போனது போகட்டும் நோக மனம் விட்டுவிடாதே
துயரங்கள் நிரந்தரம் அல்ல
நாலும் கெட்ட நாகரீக உலகம் இன்று
சிறைக்குள் சிக்காதே சிறகடிக்கட்டும் மனசு ..
Kavignar Valvai Suyen
lundi 20 octobre 2014
ஒளியால் அழைத்து விழிக்குள் ஒளிக்கிறாய் காதலை ..
ஒளியால் அழைத்து விழிக்குள்
ஒளிக்கிறாய் காதலை
உன் மௌனம் ஒன்றே ஆயிரம்
இனிமையைஅள்ளிக் கொட்டுதடி .. ..
ஒரு வரியில் என் காதலை
எப்படிச் சொல்வேன் உன்னிடம்
உன் இரு விழி இமையும்
ஒரு முறை அடித்தால் போதும்
அது அழிந்துவிடும்
இன்றொரு நாள் கலைத்துவிடு
உன் மௌன நோன்பினை
இனிய தீபாவளி நன் நாள் இன்று
அனைவருக்கும் சொல்லு நல் வாழ்த்தினை..
Kavignar Valvai Suyen
மனிதா நீ தாவும் கிளை உடைந்தாலும் ..
மனிதா நீ தாவும் கிளை உடைந்தாலும் - உன்
சபலம் சந்தியில் முந்தானை
இன்றி கிடக்கிறதுஇங்கொரு வீடும்
அங்கொரு சின்ன வீடும் உனக்கு
பந்தி இலை விரித்து கஞ்சி நிலை வீழ்ந்தாய்
ஏறு முகம் கொண்டவன் ஏழுலகையும் ஆழ
ஏறி வருகிறான் வான் வீதியில் ..
வேலிச் சண்டையில் நீ
சாதிச் சண்டையில் நீ
மூதேவி குடி வந்து குடி அறுத்தும்
சனியன் வீட்டுக் கதவையும் தட்டுகிறாய்
மழைக் கால இருட் டென்றாலும்
மந்தி உன் குணம் மாறுதில்லையே...
Kavignar Valvai Suyen
dimanche 19 octobre 2014
காலங்களை தேடுகிறேன் கைக்குப்பி விளக்கில் ...
நிகழ் காலம் இறந்தே பிறக்கிறது
எதிர் காலம் பிறக்கும் முன்பே
கொள்ளி வைக்கப் படுகிறது
பாட்டனின் காலமே,
இறந்த காலம் என்றாலும் இனிக்கிறது
பாடப் புத்தகத்தில் இருக்கும் இனிப்பை
வாழ்ந்து பார்க்கத் தொட்டுப் பார்க்கிறேன்
எட்டவில்லை எனக்கு என் செய்வேன் நான்...
Kavignar Valvai Suyen
Inscription à :
Articles (Atom)
எவர்கிறீன் !!! அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...
-
பெற்றவள் உனக்கழித்த பெறு பேற்றில் சுற்றம் சூழ வாழ்ந் துயர்ந்து சுறண்டலிலே தேய்ந்து கெட்டு செத்துவிடும் மானிடா உன் பிறப்பு முதல் உயரிய உயி...
-
காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்றே வளக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா...
-
கண்ணுக்குட்டி என்னை தண்ணீர் தந்து வளர்த்தவன் நீதான் நிழல் தந்து நின்ற என்னை நீயே வெட்டிவிட்டு விறகென்றாய் கலங்கினேன் ..! இருந்து...