சனி, 28 ஜனவரி, 2017

குளிர்த் தேசம்!!


பூப் பூவாய் பூப் பூவாய் பூமியிலே பனிப் பூக்கள்
அதை கண்டு விழி சிலிற்க உவகை கொண்டது
என் மென் மனசு !
சில்லென்ற வருடலில் சிரு புருவம் உயர்த்தி
பாதம் தொட்ட பனிப் பூக்களை
முத்தமிட குனிந்தேன்
காய்ந்த வடுக்களாய் உதடுகளில் கீறல்கள்
என்ன மாயமோ அறியேன்
சரசம் கொள்ளவில்லை
உரசி வீழ்ந்தன பனித்துகில்கள்
சுவர்க்க புரியல்ல குளிர் தேசம்
குதறித் தின்கிறது உயிரை...

பாவலர் வல்வை சுயேன்

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்