சனி, 14 ஜனவரி, 2017

விந்தை இல்லை வா நிலாவே !!உயிரின் உயிரே உள்ளங்கள் பரிமாறும் போது
உணர்வுகள் தோகை விரித்தாடுகின்றன
உயிர் தொட்டு உள்ளுணர்வலை ஆடி
உயிர் பற்றும் வேளை
இலக்கணப் பிழை பார்ப்பதில்லை இதயம் !
முத்தங்களை கொடுத்துவிடு
அதை சத்தம் இன்றி
சட்டைப் பைக்குள் வைத்துவிடுகிறேன்
அரசர்க்கு மட்டும்தானா அந்தப்புறம்
விந்தை இல்லை வா நிலாவே
தொட்டது பாதி தொடாதது மீதி
பருவ மழையில் புருவம் பூத்து
உலா வருவோம்
உயிர் உறைவிடம் செல்லும் முன்

பாவலர் வல்வை சுயேன்

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்