வெள்ளி, 20 ஜனவரி, 2017

ஈரடியும் ஓரடியாய்...ஈரடியும் ஓரடியாய் சுட்டெரித்த சூரியனை
தொட்ட நிலாவே
அவன் சுடர் பட்டதினால் பத்திக் கிட்டாயோ
பருவ நிலாவே
பனி படர்ந்த சிலையை போலே
பகல் இரவு தெரியவில்லை
இதயம் பரிமாறி தொடர்கின்றாய் என்னை நீ  
நீலக் கடல் தரை வந்து உன் பாதம் கொஞ்சதடி

தரை மீதில் எத்தனையோ
வண்ண வண்ண ஓவியங்கள்               
அத்தனையும் உனக்காக
மணல் நண்டுகள் தீட்டித் தீட்டி
உன் பாதச் சுவடுகளில்
ஆசை முத்தம் இடுகின்றன
மலரே உன் மடியில் சாய்ந்தேன் நானே
செல்பிக்குள்ளே என்னை வைத்தாய்
பூந் தோப்புத் தேனே
நிலா காலம் நீதானடி உன்னோடு என் ஊர்கோலம்
இருளேது இனி நம் வாழ்வில்
இரவும் பகலும் ஒன்றே ஒன்றுதான் .....

பாவலர் வல்வை சுயேன்

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்