vendredi 28 février 2014
jeudi 27 février 2014
காதலாகி கசிந்துருகி...
காதலாகி கசிந்துருகி
வாழ்க்கை நாணலில்
மெல்ல நடந்தேன்..!
முள்ளும் மலரும்
முத்தம் இட்டன
என் பாதடிகளை..!
தொட் டெடுத்து
துவட்டி விட்டு
இன் முகத்தோடு
வந்து விட்டேன்..!
உயிராடும் ஊஞ்சலை
நிறுத்துவதாக
அழைப்பாணை
தரப்பட்டுள்ளது
பொய் மேனி விட்டு
மெய் உயிர்
போவதெங்கே நான்
அறியேன்
இதுதான் வாழ்க்கை..!
இதுதான் பயணம்..!
இதவே நியதி..!
mardi 25 février 2014
lundi 24 février 2014
dimanche 23 février 2014
கொடி இடை வளைந்த தாமரையாள்..
ஆசை மழைத் தூரலே
சாரலாய் வந்து - என்
னை நீ தொட்டுச்
சென்றுவிட்டாய்..!
நீராடை மேல்
மின்னும் வைர
முத்துக்களைக் கண்டு
ஆசை தீரவில்லை
அள்ளி அனர்த்தம்
கண்டேன்..!
வானுயர்ந்த தன்
ஆதவனிடத்தில்
யாடை மொழியில் ஏதேதோ
சொல்லி
என்னை கேலி
செய்கிறாள்..!
அள்ளிய வைரங்களை
அப்படியே
போட்டுவிட்டேன்..!
புழுதியிலே
வீழ்ந்ததினால்
குடைக்குள் ஒதுங்க
எண்ணம் இன்றி
மாசு தனை கழுவிப்
போகிறேன்..
தொடாதே என்னை நீ..
தாங்காது என் மனசு...
samedi 22 février 2014
நாளை எனக்கும் இதுதான் நியதி..
உள்ளம்
என்றும் தொடாத ஒன்று..!
உன்னை
அழைக்கிது வா என்று..!
பிணம்
என்றே..,
சொல்லி விட்டார்
உன்னை..!
விருப்போ.. வெறுப்போ...
அழைக்கிறது
மயானம்..!
எடுத்துச்
செல்கிறேன் உன்னை..!
எரிப்பதற்கு..!
நீர்
விழி ஓடி..,
நிலத்தை
தொட்டாலும்..!
நாளை
எனக்கும் இதுதான் நியதி..,
நான்
அறிவேன்..!
மனமே
என்னை மன்னித்துவிடு..!
குட்டி போட்ட வட்டிப் பணமே..!
குட்டி போட்ட வட்டிப்
பணமே..!
நீ விட்டில் ஆனாய் எப்படி..?
உன்னைத் தொட்டெடுத்துப்
போன
அந்தத் தெருக் கம்ப விளக்கால்
என்னை விட்டெரிந்து மாண்டாயோ
சொல்லடி..?
யானை வருகிதே.. சேனை
விலகிதே..
இனி கேக்காதே.. வளியில்
இப்படி..
சேர்த்தே தாறேன் வட்டியும்
முதலும் என
எத்தனை நாள் அவள் சொல்லிவிட்டாள்
அனைத்தும் பொய்யடி.!
அவளோ சொல்லுப் பல்லக்கில்
ஏறி
போகிறாள்...
நானோ இன்னும் கால் நடையில்
அலைகிறேன்...
காதறந்து கை விட்டுப்
போனதடி என்னை
என் செருப்பும்..!
குட்டி போட்ட வட்டிப்
பணமே
மாண்டாயோ நீ சொல்லடி..?
vendredi 21 février 2014
ஆயிரம் குமிழிகளில் என் ஆவி துடிக்கிதடி..
அதிசயம் தானடி ஆரணங்கே..!
சேலைத் தாவணியில் என்னை
நெய்து..!
சோப்புப் போட்டுத் துவைக்கிறாய்...
துவைக்காதே தையலே நீண்ட
நேரம்
ஆயிரம் குமிழிகளில்
என் ஆவி துடிக்கிதடி
கலிங்கப் போர்க் களத்தில்
உன் பட்டு விரல்கள் மோதுவதை
சலவைக் கல்லு தாங்குமடி
உன் மெய்ப் பாது காவலன் நான்.,
தாங்குவேனா..?
கவலை விடு..!
முன்னரங்கப் போரிலே...
வெற்றி நிச்சயம் நமக்கே
நமக்குத்தான்
பொழுது சாயும் நேரம் ஆச்சு..!
விளக்கை ஏற்றி வென்றுடுவோம்
வா...
mercredi 19 février 2014
mardi 18 février 2014
vendredi 14 février 2014
jeudi 13 février 2014
காதலர் தின இனிய நல் வாழ்த்துகள்..
காதல்., காதல்.,
காதலென்றே காணும் இன்பம் கோடி.!
இதை வாழ்வில் ஓர் நாள் இணைந்தே.. சுரம் மீட்டி.!
திளைப்போம் கூடி..!
முற்றுப் புள்ளி
இல்லாதது.. காதல்!முடிவுரை தொடாதது.. காதல்!
ஒரு விழி அழும் போதில்
மறு விழி சிரிப்பதல்ல.. காதல்!
உடல் பசி சுவை கொள்ளும்
பஞ்சாமிர்தமும் அல்ல.. காதல்!
நெஞ்சறை தனில் - வெண்
சாமரைத் தென்றல்கொள்வதே.. காதல்!
பயணங்கள் முடியும்
பாதைகள் தொடரும்
பாரினில் புது
பூக்கள் மலரந்து வரும்நீ இன்றி போனால் என்ன.?
எண்ணற்ற காதலர்கள்
உன் பெயர் சொல்லி மகிழும்
இதுவே.. உன்னதக் காதல்..!
mardi 11 février 2014
dimanche 9 février 2014
விடியலை தொடவேண்டும் விழியே...
கைவளையும் காகிதப்
பூவும் தானே
எம் சிறை
இருப்புக்கான சீர்கள் ..!கனாக் காண்பதற்காகவா..?
இருளோடு உறவாடும் உன்னை
சினேகம் கொண்டேன்..!
மஞ்சள் குளித்து மௌனம் காத்து
மரணித்துக் கிடக்கிறோம் இன்னும்..!
பெத்துப் போட ஒரு இயந்திரம்..
சமைத்துத் தர ஒரு இயந்திரம்..மண் குடிலின் கிழிந்த பாய்களாய்
இன்னும் பெண்கள்..!
விடியலை தொடவேண்டும் விழியே
திறந்து கொள்.! உன் சிறைக் கதவை.!
Inscription à :
Articles (Atom)
எவர்கிறீன் !!! அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...
-
பெற்றவள் உனக்கழித்த பெறு பேற்றில் சுற்றம் சூழ வாழ்ந் துயர்ந்து சுறண்டலிலே தேய்ந்து கெட்டு செத்துவிடும் மானிடா உன் பிறப்பு முதல் உயரிய உயி...
-
காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்றே வளக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா...
-
கண்ணுக்குட்டி என்னை தண்ணீர் தந்து வளர்த்தவன் நீதான் நிழல் தந்து நின்ற என்னை நீயே வெட்டிவிட்டு விறகென்றாய் கலங்கினேன் ..! இருந்து...