செவ்வாய், 20 ஜூன், 2017

நாம் காணும் வேடங்கள் வெளி வேசமே !!!

துள்ளித் துள்ளி நிதம் தாவி வரும் வெள்ளி அலையே
உன் புன்னகை பூச் சொரிவில் கனிவுறு மனம் கண்டேன்
ஊருக்குள் உத்தமரை நிதம் தேடி நீ வருகிறாய்
நூல் வேலி தாண்டித் தாண்டி
நுகர் கொம்பு ஊன்றி ஊன்றி
நகம் பதிக்கும் கூட்டம் தானே இங்கே இங்கே

தவம் இருந்த நாட்கள் எண்ணி தாண்டும் நிலை தாண்டிவிட்டால்
ஆணோ பெண்ணோ தொடாத பாகங்கள் ஏதும் இல்லை
தொட்டணைத்தே வாழுகிறார் தொட்டும் குறை விட்டதில்லை
பகலிலே அருந்ததி நோக்கும் பெருந்தகையே எல்லோரும்
பொய் முகங்கள் போடும் கோலம் கை விலங்கும் காணாத் தூரம்
பூகம்பச் சாரல் வீழ்ந்து புறையோடி போன பின்னும்
நீ அள்ளி வருகிறாய் வெள்ளி அலை
இங்கு நாம் காணும் வேடங்கள் வெளி வேசமே.....

பாவலர் வல்வை சுயேன்

பசியில் அழுகிறான் இளையவன்!!!

தொட்டுத் தொட்டு பட்டு வண்ணம் எங்கிறீர் பட்டுச் சட்டை கேட்டேன் தரவில்லை கூடி விளையாட ஒண்ணுக்கு மூணு தம்பி பாப்பா பெற்று தந்திருக...