dimanche 18 octobre 2015

நற் துணையாவது நவ ராத்திரி .....

விசயதசமியின் வித்தியாரம்பம்  வீடுகள் தோறும்
கல்வியே கண்ணென ஏடெழுதும்
நவ ராத்திரியின்  இன்ப வரம் 
ஒன்பது இரவும் தேவியர் மூவரின் பாதம் பணிந்து
கூற்றுடை மறையாய் காற்றுடை வெளியிலும்
கல்வி செல்வம் வீரம் என நாம் காணும் இன்ப சுகம்
தேனும் தினையொடு தித்திக்கும் சுவை படைத்து
ஒருதிரி முகமாய் உம் திருவடி போற்றி
பகரொளியாற்றின் பண்புடை நினைந்து
நேரிய வழியில் பேரிடி தகர்த்திட
பணிந்தோம் பண்புற்றோம் இகபரம் அறியோம் தேவியரே
நல் அருளாலே தீவினை அறுத்து தகமை அடைவோம்
ஒரு பொழுதேனும் உமை மறவோம் உய்வுற்று உவகை பெற
ஆத்ம பலம் அள்ளித் தந்தருள்வீர் அன்னையரே
 பொற்புடை தேவியே போற்றி.... கல்விக் கண் வாணியே போற்றி.....
வீரத்தின் சக்தியே போற்றி.... 
நவராத்திரியின்  நான்மறை வெல்க  நா, நிலம் தழைத்தே வாழ்க,,,,
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...