வியாழன், 29 மே, 2014

கனா காணும் காலங்கள் பதினாறு ..


கனா காணும் காலங்கள் பதினாறு
பனித்திரை விலக்கி அனல்த் திரை
கூட்டுதே பதினெட்டு..!
தொட்டணைக்கும் காலங்கள்
விரகம் மூட்டுதடி
சங்கமம் தேடும் விழிகளுக்கு
நதி மூலம் எது வென
சொல்லிக் கொடு...
 
அட போடா இரவைத் தின்னும் பகலும்
பகலைத் தின்னும் இரவுமாய்
உலகே உறுளுதடா ..!
இதை இல்லை எனச் சொல்பவன் உடலில்
ஜீவன் ஏதடா..

தீயதை தீயே தின்னும் அறிவேன் அனலே !!!

கருப் பொருளான கவிதை நீ அலை கடல் மீதிலும் ஓடம் நீ அன்பெனும் அறிவுடமை அழி நிலையாகி தாழ்வுறு பேதமை பெருஞ் சுவராகினும் தகர்வது செய்த...