சனி, 25 மார்ச், 2017

எந்த நிலை வந்தாலும் கலங்காதே !!!

பாலுக்குப் பாலகன் பசியென்றழுதிட
மடிப் பாலூட்டி நின் தாய் முகம் மலர  
இகபரம் காணும் உயிரே !  
வேண்டா நிலையுறு கூடுதனை
நீ விட்டுப் போக மனம் இன்றி
நீள் மூச்செறிந்து நீண்டு கிடந்திடினும் 
பசும் பால் பருக்கி கரும வினை அகற்றி
வேண்டியே இறைவனை நின் உயிர் பிரித்து   
பிணம் எனச் சொல்லியே சுடு காடு சுமந்து
சுட்டெரித்துச் செல்வார் உறவென வந்தோரே
பந்த பாசம் எல்லாம் நிந்தன் உயிர் உள்ளவரை
எந்த நிலை வந்தாலும் கலங்காதே
காத வழி தூரம் கூடி வர
உறவும் இல்லை உன்னோடு !!
பாவலர் வல்வை சுயேன்

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்