சனி, 24 ஜனவரி, 2015

மனிதன்...


கருவில் உருவாகி மடியில் விளையாடி
மழலை மொழி பேசி பகிர்ந்துன்டான் மனிதன்
தடங்கள் இருக்கின்றன, அவனை காணவில்லை!
மனிதன் எங்கே ? தேடுகிறேன் !
எழுத்தில் இருக்கிறது உயர் வழ்வு
உரிமை இல்லை உயிர் இல்லை
இப்போது அதற்கு !
மக்களை பெறுகிறாள் மாதரசி மகராசி
மனிதம் செத்த மண்ணில் புனிதம் புறையோடிவிட்டது
சுடாமல் சுடும் வாழ்வுக்குள் தொடாமலே தீயுது நெஞ்சு
ஆசை மோகம் குரோதம் இத்தியாதி இத்தியாதி
வைரஸ் என்பது இதுதான் - தீக்குச்சியும் தேவை இல்லை
கண்ணாடியில் என் முகம் பார்த்தேன் மனிதனை காணவில்லை
புனிதம் அற்றவர்களில் நானும் ஒருவன் என்பதை
நிலை நிறுத்தியது கண்ணாடி...
Kavignar Valvai Suyen