செவ்வாய், 27 ஜனவரி, 2015

இடம் மாறும் இதயங்கள்...


விழிகளால் கொய்தாய் என்னை நீ
உன் தோழில் சாய்ந்துவிட்டேன்  
இதழ்களின் ஈரம் இடம் மாறியதால்
குன்றேறி குளிர் மேகம் மூடுதடா
பூவுக்குள் புதுமழை பூமிக்கும் தெரியலையே
பூபாளமோ தேனாமிர்தமோ நீ வாசிக்கின்றாய்
சதிராடுகின்றன நெற் கதிர்கள்
வரப்புயர வாழ்வளித்த கோமகனே
ஹரிகிருஷ்ணனின் புள்ளாங்குழல் நான்
வாசிக்க இது நேரம் அல்ல என்றாலும்
வீசிவிடாதே தரையில் என்னை
சிற்பியே நீ வார்த்தது சிலையல்ல சிசு
கருவறையில் வைத்து உயிர் வளர்க்கிறேன்
புதிய வார்ப்புகள் நாளை தங்கத் தொட்டிலில்...
Kavignar Valvai Suyen

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்