திங்கள், 26 ஜனவரி, 2015

அந்த ஊமை இரவுகளின் துயர்...


எரிச் சுவாலைக்குள் எங்கள் தாயகம்
வர்ணனும் ஒளிந்து கொன்டான்
இன்றும் பேச்சிழந்து துடிக்கின்றன
அந்த ஊமை இரவுகளின் துயர்
விழிகளின் இருப்பில் இல்லை
கண்ணீர் துளிகளும்..
ஊரை விட்டுச் சென்றபோதில்
உசிரைத்தான் கொன்டு சென்றோம்
இயந்திரப் பறவைகள் எம்மை துரத்தியது
அகதிகளாய்.. ..
கொத்தணிக் குன்டுகள் போகும் இடம் எங்கும்
கொத்திக் கொத்தி தின்டது உசிர்களை
பதுங்கு குழியிலும் பிணக்காட்டிலும்
துலைத்துவிட்டேன் உறவுகளை
ஒத்தையிலே என்னை கன்ட
ஒத்தை குயில் ஒன்று
எங்கிருந்தோ கூவியது முகாரி ராகம்
கடந்து செல்லும் காத்திலே
கரைந்திடக்கன்டேன் அந்தக் குயிலின் ஓசை
தோப்பிழந்த கானகமாய் எங்கள் தாயகம்
ஆதவனை காணவில்லை இன்னும்..  
Kavignar Valvai Suyen

செல்லரித்த வாழ்வு !!

  மன்றேறி ஜீவனாம்சம் கொடுத்தாலும் கரம் விட்டகலா காதலி செல் போன் செல்லரித்த வாழ்வெனினும் உதட்டோடு உதட்டு முத்தம் இல்லையேல் நித...